நாடு முழுவதும் கல்லூரிகள் திறப்பு – யுஜிசியின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!!

0
நாடு முழுவதும் கல்லூரிகள் திறப்பு - யுஜிசியின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!!
நாடு முழுவதும் கல்லூரிகள் திறப்பு - யுஜிசியின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!!
நாடு முழுவதும் கல்லூரிகள் திறப்பு – யுஜிசியின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!!

கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் படிப்படியாக மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. இதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வெளியிட்டு உள்ளது.

யுஜிசி வழிகாட்டுதல்கள்:

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கத் தொடங்கி உள்ளன. மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. கல்லூரிகளை மீண்டும் திறப்பதற்கான யுஜிசியின் வழிகாட்டுதல்கள் அதனால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

கல்லூரி வளாகங்கள் 50 சதவீத மாணவர் வருகையுடன் செயல்பட வேண்டும். சமூக இடைவெளி, முகக்கவசம் அணிந்து கொள்வது, கை கழுவுதல் போன்ற பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கல்லூரி நிர்வாகம் ஒவ்வொரு நாளும் வளாகங்கள் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

  • கல்லூரி வளாகத்திற்குள் ஒருவருக்கொருவர் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியை பராமரிக்கவும்.
  • முகக்கவசத்தை அனைத்து இடங்களிலும் பயன்படுத்தவும்.
  • கைகள் பார்வைக்கு அழுக்காக இல்லாவிட்டாலும் கூட சோப்புடன் (குறைந்தது 40-60 வினாடிகளுக்கு) அடிக்கடி கழுவ வேண்டும்.
  • ஆல்கஹால் அடங்கிய கிருமிநாசினிகளை (குறைந்தது 20 விநாடிகளுக்கு) பயன்படுத்தவும்.
  • இருமல் / தும்மும் போது வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை அல்லது துணி மூலம் மூட வேண்டும்.
  • வளாகத்திற்குள் எச்சில் துப்புவது கண்டிப்பாக தடைசெய்யப்படும்.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் யுஜிசி வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!