திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய முயற்சி – லட்டுடன் ஊதுபத்தி விற்பனை!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இறைவனுக்கு போடப்பட்ட மாலையில் இருந்து ஊதுபத்தி தயாரிக்க பெங்களூருவைச் சேர்ந்த புகழ்பெற்ற தனியார் ஊதுபத்தி நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது. இதற்கு தேவஸ்தான நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
ஊதுபத்தி தயாரிப்பு:
திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் திருப்பதி ஊரில் இத்தலம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் நாடு முழுவதும் பிரபலமானது. மேலும் ஆண்டுதோறும் இறைவனை தரிசனம் செய்ய லட்சக்கணக்கில் மக்கள் வருகின்றனர். மேலும் இந்தியாவில் உள்ள பணக்கார கோவில்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.
தமிழக அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – நீட் தேர்வு விண்ணப்பம்!
இந்நிலையில் திருப்பதியில் மலை மேல் உள்ள ஏழுமலையான் கோயில், திருச்சானூர் பத்மாவதி அம்மன் கோயில், கோவிந்தராஜ சுவாமி கோயில் என பல கோயில்களை திருமலை – திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. அதில் உள்ள மூல மூர்த்திகள், உற்சவ மூர்த்திகளை அலங்காரம் செய்ய தினமும் பல்லாயிர டன் எடையுள்ள மலர்களால் ஆன மாலைகள் சூடப்படுகின்றன. கடவுள்களின் சிலைகளை அலங்கரிக்கும் இந்த மாலைகள் பக்தர்களால் புனிதமானதாக கருதப்படுவதால் அவை பாதுகாப்பான முறையிலேயே அப்புறப்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் இந்த மலர்கள் வீணாகாமல் அதனை பயன்படுத்தி ஊதுபத்தி தயாரிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதேநேரம் பெங்களூருவைச் சேர்ந்த புகழ்பெற்ற தனியார் ஊதுபத்தி தயாரிப்பு நிறுவனம் ஒன்று லாப நோக்கம் இன்றி தேவஸ்தான கோவிலில் பயன்படுத்தப்பட்ட மலர் மாலைகளை பயன்படுத்தி ஊதுபத்தி தயாரித்து வழங்க முன்வந்துள்ளது
TN Job “FB
Group” Join Now
அவ்வாறு தயார் செய்யப்பட்ட ஊதுபத்திகள் அடுத்த மாதம் 15 ஆம் தேதி முதல் திருப்பதி மலையில் உள்ள பிரசாதம் விற்கும் கவுண்டர்களில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன. அதன் விலை குறித்த விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் திருப்பதி தேவஸ்தானத்தில் ஆயுர்வேத பொருட்கள் தயாரிப்பு கூடம் மூலமாக 115 வகையான பொருட்களை தயார் செய்ய மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. அதில் 70 வகையான பொருட்களை தயார் செய்ய ஆயுஷ் அமைச்சகத்திடம் தேவஸ்தானம் அனுமதி கேட்டுள்ளது.