Twitter ப்ளூ டிக் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – எலான் மஸ்க் வெளியிட்ட முக்கிய தகவல்!

0
Twitter ப்ளூ டிக் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - எலான் மஸ்க் வெளியிட்ட முக்கிய தகவல்!
Twitter ப்ளூ டிக் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - எலான் மஸ்க் வெளியிட்ட முக்கிய தகவல்!
Twitter ப்ளூ டிக் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – எலான் மஸ்க் வெளியிட்ட முக்கிய தகவல்!

ட்விட்டரில் பயனர்களுக்கு அளிக்கப்படும் ப்ளூ டிக்கிற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் எலான் இந்த முடிவில் இருந்து பின் வாங்கவில்லை. தற்போது ப்ளூ டிக் கணக்குகள் சரிபார்க்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ட்விட்டர்:

உலகின் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க் அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். இவர் நிறுவனத்திற்கு தலைமை பொறுப்பு ஏற்றதிலிருந்து பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் முதல் கட்டமாக ட்விட்டர் பயனர்களுக்கு வழங்கப்படும் ப்ளூ டிக் நடைமுறையில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது இனி ப்ளூ டிக்கை பெற விரும்புபவர்கள் மாதம் தோறும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெறும் பயனர்களுக்கு ட்விட்களை எடிட் செய்யும் வசதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ப்ளூடிக் சந்தா முறைக்கு பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் கட்டண முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் – உயர் நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

தற்போது போலி ப்ளூடிக் ப்ரொபைல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது இதனை தடுக்க தற்போதைக்கு ப்ளூடிக் அங்கீகாரம் நிறுத்தி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பில் அனைத்து ப்ளூடிக் கணக்குகளையும் ட்விட்டர் நிறுவனம் மீண்டும் சரிபார்க்கும் என்று கூறியுள்ளார். இதன் மூலம் போலி கணக்குகள் தடை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!