தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டண நிர்ணயம் – கால அவகாசம் நீட்டிப்பு!
ஆண்டுதோறும் தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும். தற்போது அதற்கான கால அவகாசம் முடிவடைந்து உள்ள நிலையில் கூடுதல் அவகாசம் வழங்கி கமிட்டி உத்தரவிட்டுள்ளது.
கல்வி கட்டண நிர்ணயம்:
தமிழகத்தில் பல்வேறு தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. தனியார் பள்ளிகளில் அதிகப்படியான கட்டணங்கள் வசூலிப்பதாக பல்வேறு தரப்பில் புகார்கள் எழுந்து வருகிறது. அதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பள்ளிக் கல்வித்துறை மாணவர்களுக்கான பள்ளி கட்டணத்தை நிர்ணயித்து வருகிறது. பெற்றோர்களிடம் தனியார் பள்ளிகள் குறித்த மோகம் அதிகரித்து வருவதால் அப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
ஊழியர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை – பிரபல நிறுவனம் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து மாணவர்களின் சேர்க்கைக்கு அதிகமாக கட்டணம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து அனைவருக்கும் கட்டாய மற்றும் இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தனியார் பள்ளிக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிக்கும். தமிழகத்தில் சுயநிதியில் செயல்படும் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ, மற்றும் ஐ.சி.எஸ்.இ பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான சுயநிதி பள்ளிகள் கல்வி கட்டண கமிட்டி செயல்படுகிறது.
TN Job “FB
Group” Join Now
கல்வி கட்டணம் குறித்து விவரங்கள் அனுப்புவதற்கான கால அவகாசம் முடிந்துள்ளது. கொரோனா காலம் என்பதால் குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப முடியாமல் போனது என்று தனியார் பள்ளிகள் சார்பில் கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வரும் 30ம் தேதி வரை கூடுதலாக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக கல்வி கட்டண கமிட்டி தனி அலுவலர் கூடுதல் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.