பிக்பாஸ் டைட்டில் வின்னர் நடிகர் சித்தார்த் சுக்லா திடீர் மரணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பிரபல ஹிந்தி சீரியல் நடிகரும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளருமான சித்தார்த் சுக்லா இன்று (செப்டம்பர் 2) அதிகாலை ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இந்த மரணம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் மரணம்
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த பிரபல நடிகர் சித்தார்த் சுக்லா (40) இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்த சித்தார்த் சுக்லா ‘ஹம்டி ஷர்மா கே துல்ஹானியா’ என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்னதாக ‘பாபுல் கா ஆங்கன் சூட்டி நா’, ‘ஜானே பெச்சானே சே’ என்ற சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்திருந்தார்.
ராதிகாவிற்கு வாங்கிய புடவையை பாக்கியாவிற்கு கொடுத்து ஏமாற்றும் கோபி – இன்றைய எபிசோட்!
இவர் நடித்துள்ளசில சீரியல்கள் தமிழ் மொழியிலும் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 13 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், அப்போட்டியில் வெற்றி பெற்றார். இந்நிகழ்ச்சியில் இவருக்கும் ஸ்நேகாஸ் கில் என்ற பெண் போட்டியாளருக்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரி மக்களால் பெரிதளவு ரசிக்கப்பட்டது.
TN Job “FB
Group” Join Now
தற்போது மும்பையில் தனது தாய் மற்றும் சகோதரிகளுடன் வசித்து வந்த சித்தார்த் சுக்லாவுக்கு இன்று (செப்டம்பர் 2) அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள ஹூப்பர் மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்ட அவர் வழியிலேயே மரணமடைந்தார். சித்தார்த் சுக்லாவின் இந்த திடீர் மரணம் பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, மறைந்த பாலிவுட் நடிகர் சித்தார்த் சுக்லாவுக்கு ரசிகர்கள் தங்களது இரங்கலையும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.