TRP ரேட்டிங்கில் முதலிடம் பிடித்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ – ‘பாரதி கண்ணம்மா’ எந்த இடம் தெரியுமா?

0
TRP ரேட்டிங்கில் முதலிடம் பிடித்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' - 'பாரதி கண்ணம்மா' எந்த இடம் தெரியுமா?TRP ரேட்டிங்கில் முதலிடம் பிடித்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' - 'பாரதி கண்ணம்மா' எந்த இடம் தெரியுமா?
TRP ரேட்டிங்கில் முதலிடம் பிடித்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' - 'பாரதி கண்ணம்மா' எந்த இடம் தெரியுமா?
TRP ரேட்டிங்கில் முதலிடம் பிடித்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ – ‘பாரதி கண்ணம்மா’ எந்த இடம் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் இந்த வாரத்துக்கான TRP ரேட்டிங்கில் முதலிடத்தை வகித்துள்ளது. இதை தொடர்ந்து ‘பாரதி கண்ணம்மா’ சீரியலும் அதிகளவு ரேட்டிங் பெற்று 2ஆவது இடத்தை பிடித்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பொதுவாக பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் அதிகளவு TRP ரேட்டிங்கில் இடம்பிடிப்பது உண்டு. அதாவது இரவு 7 மணி முதல் 9 மணி வரை ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கு பார்வையாளர்கள் அதிகம். அதனால் அனைத்து சேனல்களிலும் மிக சிறந்த கதைகளுக்கு மட்டும் தான் பிரைம் நேர ஒளிபரப்பு கிடைக்கும். அந்த வகையில் விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘பாரதி கண்ணம்மா’ மற்றும் ‘பாக்கியலட்சுமி’ போன்ற சீரியல்கள் அதிகளவு பார்வையாளர்களை கொண்டுள்ளது.

குலதெய்வ கோவிலுக்கு செல்லும் குடும்பத்தினர், கண்ணன் ஐஸ்வர்யாவிற்கு ஆதரவு தரும் கஸ்தூரி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

இருந்தாலும் ஒவ்வொரு வாரம் ஒளிபரப்பப்படும் எபிசோடுகளை பொறுத்து அந்த வார TRP ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்க இந்த சீரியல்கள் போட்டி போட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் ஒளிபரப்பான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் அதிகளவு பார்வையாளார்களை ஈர்த்து TRP ரேட்டிங்கில் அர்பன் மற்றும் ரூரல் பகுதியை சேர்த்து 22 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த வாரத்தில் ஒளிபரப்பான லட்சுமி அம்மாவின் இறுதி சடங்கு காட்சிகள் பார்வையாளர்களை ஈர்த்திருந்தது.

சமையல் ஆர்டரை சிறப்பாக செய்து முடித்த பாக்கியா, நேரம் ஆகியதால் கோவத்தில் தொழிலதிபர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

அதே போல இந்த வாரம் வெளியாகி இருக்கும் எபிசோடுகளும் அதிகளவு பார்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாகவும், மொத்த தமிழ் சீரியல்களிலும் நம்பர் 2 இடத்தையும் பிடித்துள்ளது. அதே போல வேணுவின் நெஞ்சு வலி, பாரதி மற்றும் கண்ணம்மா தொடர்புடைய காட்சிகளும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை 20 புள்ளிகளுடன் முன்னணி இடத்தில் நிறுத்தியுள்ளது. அதன் கீழ் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் விஜய் டிவியின் நம்பர் 2 சீரியலாகவும், மொத்த சீரியல்களையும் சேர்த்து நம்பர் 4 இடத்தையும் பிடித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!