TRPயில் பின்னடைவை சந்தித்த “ராஜா ராணி 2” சீரியல் – காரணம் ஆலியாவா? ரசிகர்கள் வருத்தம்!

0
TRPயில் பின்னடைவை சந்தித்த
TRPயில் பின்னடைவை சந்தித்த "ராஜா ராணி 2" சீரியல் - காரணம் ஆலியாவா? ரசிகர்கள் வருத்தம்!
TRPயில் பின்னடைவை சந்தித்த “ராஜா ராணி 2” சீரியல் – காரணம் ஆலியாவா? ரசிகர்கள் வருத்தம்!

விஜய் டிவி சீரியல்கள் புதுமைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் நிலையில் “ராஜா ராணி 2” சீரியல் சில காரணங்களால் TRPயில் பெரிய சரிவை கண்டுள்ளது. அதற்கு என்ன காரணம் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ராஜா ராணி 2:

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் TRP பட்டியலை வைத்து தான் முன்னணி சீரியலை கணிக்க முடியும். வழக்கமாக சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் சீரியல்களுக்கு இடையே தான் போட்டி இருக்கும் அதில் முதல் இரண்டு இடங்களில் விஜய் டிவி சீரியல்களும், சன் டிவி சீரியல்களும் இருக்கிறது. அந்த வகையில் புதுமையான கதையுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ராஜா ராணி 2. இதில் தொடக்கத்தில் கதாநாயகியாக நடிகை ஆலியா மானசாவும் அவருக்கு ஜோடியாக நடிகர் சித்துவும் நடித்து வந்தனர்.

முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்ட ஐலா பாப்பா & அர்ஷ் – வைரலாகும் வீடியோ!

இந்த சீரியல் தொடங்கப்பட்டு ஆலியா சித்து ஜோடிக்கு தனி ரசிகர்கள் இருந்து வந்தனர். அவர்கள் கெமிஸ்ட்ரி சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் ஆலியா சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தருணத்தில் இரண்டாவது கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். அதனால் அவர் சீரியலை விட்டு விலக முடிவு செய்தார். அவருக்கு பதிலாக தற்போது நடிகை ரியா நடித்து வருகிறார். போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என சந்தியா கனவுடன் இருக்க அதற்கு பொருத்தமாக தான் ரியா இருக்கிறார்.

Exams Daily Mobile App Download

தற்போது சீரியலில் பார்வதி பாஸ்கர் திருமணம் நடைபெற்று வருகிறது, அதில் விக்கி அர்ச்சனா செய்யும் வில்லத்தனம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்த வாரம் வெளியான TRP பட்டியலில் இந்த சீரியல் பின்னடைவு சந்தித்துள்ளது. இதற்கு ஆல்யாவின் விலகல் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆலியாவின் விலகலை சரி செய்ய கதையில் புது மாறுதல்கள் கொண்டு வந்தாலும் தொடர் வீழ்ச்சியால் ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!