முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்ட ஐலா பாப்பா & அர்ஷ் – வைரலாகும் வீடியோ!

0
முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்ட ஐலா பாப்பா & அர்ஷ் - வைரலாகும் வீடியோ!
முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்ட ஐலா பாப்பா & அர்ஷ் - வைரலாகும் வீடியோ!
முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்ட ஐலா பாப்பா & அர்ஷ் – வைரலாகும் வீடியோ!

ஆலியாவிற்கு ஏற்கனவே ஐலா என்கிற அழகிய பெண் குழந்தை இருக்கிறது. தற்போது ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இருவருக்கும் முதல் தடுப்பூசியை போட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஐலா பாப்பா & அர்ஷ்:

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி தொடரின் மூலமாக சந்தித்து, இந்த சீரியலின் மூலமாக ஒன்றாக பழகி காதலித்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்ட ஜோடி தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். திருமணமாகி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுக்கு மேலாகியும் காதலித்த போது இருந்த அதே அன்புடன் இன்றும் இருந்து வருகின்றனர். திருமணமாகி சில மாதங்களிலேயே ஆலியா முதல் குழந்தைக்கு கர்ப்பமானார். கர்ப்பமாக இருந்தாலும் கூட தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார். ஆலியாவிற்கு ஐலா என்கிற அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது. ஐலா பாப்பா பிறந்து சில நாட்களிலேயே மீண்டும் சீரியலில் இணைந்து கொண்டார்.

பாக்கியாவை வீட்டிற்கு அழைத்த ராதிகா, மாட்டிக்கொண்டு முழிக்கும் கோபி – “பாக்கியலட்சுமி” சீரியல் இன்றைய எபிசோட்!

இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜாராணி சீசன் 2வில் நடிக்க ஒப்பந்தமானார். சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். முதல் குழந்தையை போலவே கர்ப்பமாக இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் கூட தொடர்ந்து ராஜா ராணி தொடரில் நடித்து வந்தார். குழந்தை பிறந்த பிறகும் கூட சந்தியா கதாபாத்திரத்தில் நடிப்பேன் எனவும் கூறியிருந்தார். பின்பு பிரசவத்திற்காக பிரசவ நாளுக்கு கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு முன்பாகவே சீரியலில் இருந்து விலகினார்.

Exams Daily Mobile App Download

பிரசவத்திற்காக சென்ற பிறகு ரியா என்ற புதுமுக நடிகை சந்தியாவாக அறிமுகமானார். தற்போது ஆலியாவிற்கு ஒரு அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறந்த பிறகு குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ராஜா ராணி தொடரில் மீண்டும் இணையப் போவதில்லை எனவும், ரியா தான் இனிமேல் சந்தியா கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிப்பார் எனவும் கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். அவ்வப்போது தனது மகனுடன் இருக்கும்படியான வீடியோக்களை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது தனது மகள் ஐலா பாப்பா மற்றும் மகன் அர்ஷ்க்கு முதல் தடுப்பூசியை போட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!