திருநங்கைகளுக்கு காவலர் பணிக்கு தனி திறன் அளவீடுகள் – தெலுங்கானா அரசுக்கு உத்தரவு!!

0
திருநங்கைகளுக்கு காவலர் பணிக்கு தனி திறன் அளவீடுகள் - தெலுங்கானா அரசுக்கு உத்தரவு!!
திருநங்கைகளுக்கு காவலர் பணிக்கு தனி திறன் அளவீடுகள் - தெலுங்கானா அரசுக்கு உத்தரவு!!
திருநங்கைகளுக்கு காவலர் பணிக்கு தனி திறன் அளவீடுகள் – தெலுங்கானா அரசுக்கு உத்தரவு!!

காவலர்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும் போது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உள்ளது போல், திருநங்கைகளுக்கு என்று தனிப்பட்ட திறன் மதிப்பீடுகள் வேண்டும் என்று அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு:

காவலர் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது தனித்தனியாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என்று உடல் தகுதி அளவீடுகள் மற்றும் சலுகைகள், தளர்வுகளை நிர்ணயித்து, அதன்படி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பணி நியமனம் அளிக்கப்படுகிறது. ஆனால் 3ம் பாலினத்தவர்களான திருநங்கைகளுக்கு என்று தனிப்பட்ட உடல் தகுதிகள் எதுவும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை. இதற்காக தெலுங்கானா மாநிலத்தில் உள்ள திருநங்கைகள் தங்களுக்கு என்று தனிப்பட்ட அளவீட்டு மதிப்புகள் தேவை என்று கோரிக்கையை முன்னதாக அரசுக்கு வைத்துள்ளனர்.

தமிழகத்தில் ஜன. 26 குடியரசு தினவிழா ஏற்பாடுகள் தீவிரம் – மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய உத்தரவு!

Follow our Instagram for more Latest Updates

இது தொடர்பாக பதில் அளித்துள்ள காவலர் ஆட்சேர்ப்பு துறை அதிகாரிகள், விண்ணப்பத்தில் தேர்வர்கள் எந்த பாலினம் என்று குறிப்பிட்டுள்ளார்களோ, அதன்படி தான் உடல் தகுதி தேர்வில் மற்றும் சலுகைகள், தளர்வுகள் விஷயத்தில் நடத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 3ம் பாலின பிரிவை காவலர் பணி தேர்வுக்கு குறிப்பிடாதது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக தெலுங்கானா மாநில அரசு ஜனவரி 21ம் தேதிக்குள் உரிய பதிலை அளிக்க உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்குள் பதில் அளிக்க தவறும் பட்சத்தில், மீண்டும் வழக்கு பதிவு செய்தவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!