SBI இன்றும், நாளையும் வங்கி சேவைகள் நிறுத்தம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
SBI இன்றும், நாளையும் வங்கி சேவைகள் நிறுத்தம் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
SBI இன்றும், நாளையும் வங்கி சேவைகள் நிறுத்தம் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
SBI இன்றும், நாளையும் வங்கி சேவைகள் நிறுத்தம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

வழக்கமான பராமரிப்பு பணிகளுக்காக SBI வங்கியின் நெட் பேங்கிங், யோனோ உள்ளிட்ட பிற சேவைகள் இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 6,7) நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வாடிக்கையாளர்கள் இவ்வங்கி சேவைகளை விரைந்து நிறைவேற்றி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேவைகள் நிறுத்தம்

SBI வங்கியின் இணைய சேவைகளில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் சில பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது. அதன் காரணமாக இன்டர்நெட் பேங்கிங் மற்றும் YONO மொபைல் ஆப் சேவைகள் இன்று (ஆகஸ்ட் 6) மற்றும் நாளை (ஆகஸ்ட் 7) கிட்டத்தட்ட 150 நிமிடங்களுக்கு நிறுத்தப்படும் என வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் SBI ன் இணைய வங்கியான YONO, YONO Lite, YONO வர்த்தகம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி 10.45 மணி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி 1.45 மணி வரை பாதிக்கப்படும்.

கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் செல்போன் இணைப்பு துண்டிப்பு – அரசு எச்சரிக்கை!

இது தொடர்பாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளபடி, ‘SBI வங்கியில் வழக்கமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் இன்டர்நெட் பேங்கிங் மற்றும் YONO மொபைல் ஆப் சேவைகள் இன்று (ஆகஸ்ட் 6) மற்றும் நாளை (ஆகஸ்ட் 7) ஏறத்தாழ 150 நிமிடங்களுக்கு நிறுத்தப்படும். ஒரு சிறந்த வங்கி அனுபவத்தை வழங்க முயற்சித்து வருவதால், எங்களது மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் பொறுமை காக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதனுடன் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி தனது வாடிக்கையாளர்களை இணைய மோசடிகளில் இருந்து பாதுகாக்க அவ்வப்போது எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகிறது. மேலும் வங்கி சேவைகளுக்கான சில பயன்பாடுகளை மேம்படுத்தியுள்ளது. அந்த வகையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் அதிகம் பயன்படுத்தும் யோனோ லைட் செயலியில் ஒரு புதிய அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் ஒரு சாதனத்திற்கு, ஒரு நபரை மட்டுமே பரிவர்த்தனைக்கு அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!