தமிழகத்தில் 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஆசிரியர்களுக்கு பயிற்சி தொடக்கம்!

0
தமிழகத்தில் 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - ஆசிரியர்களுக்கு பயிற்சி தொடக்கம்!
தமிழகத்தில் 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - ஆசிரியர்களுக்கு பயிற்சி தொடக்கம்!
தமிழகத்தில் 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஆசிரியர்களுக்கு பயிற்சி தொடக்கம்!

மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், ‘எண்ணும், எழுத்தும்’ திட்டத்தின் கீழ், பரங்கிமலை வட்டாரத்தில் அடங்கிய பல்லாவரம் மற்றும் தாம்பரம் நகரத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த 6-ம் தேதி தொடங்கி 10-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது.

பயிற்சி வகுப்பு

கொரோனா பதிப்பின் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாகவே கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடம் நடத்தி வந்தனர். எனவே, அதிகமான அளவில் எழுத படிக்க பயிற்சி இல்லாததால் மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமப்படுகின்றனர். ஆகையால், தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 1 முதல் 3 வகுப்புகளுக்கு கல்வி கற்றுத்தர வசதியாக 2022-23ஆம் ஆண்டில் இருந்து ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயற்சி முகாம் நடத்தப்படுகிறது.

தமிழக அரசு பள்ளிகளில் மீண்டும் LKG, UKG வகுப்புகள் – அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!

இந்த பயிற்சி முகாமில் மாணவர்கள் பாடசெயல்பாட்டில் மாணவர்களை ஈடுபட செய்தல், விளையாட, கலந்துரையாடலாக, வினா கேட்டல், புதிருக்கு விடை கண்டுபிடிப்பது போன்ற செயல்களை தானே செய்வதற்காக திறன்களை மேம்படுத்த மாணவர்களுக்கு எண்ணும், எழுத்தும் கற்பிக்கும் முறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த முகாம் பரங்கிமலை வட்டத்தில் அடங்கிய பல்லாவரம், தாம்பரத்தில் உள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சி கடந்த 6-ம் தேதி தொடங்கி 10-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்த பயிற்சி முகாமில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர். முகாமின் மூன்றாம் நாளான நேற்று , அஸ்தினாபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி நடத்தப்பட்டு வந்தது. இந்த முகாமை அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா பார்வையிட்டார். அதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயலட்சுமி மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஜூலியட் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் கடைசி இரண்டு நாட்களில் ஆசிரியர்களுக்கு கற்றல் உபகரணங்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here