தமிழக அரசு பள்ளிகளில் மீண்டும் LKG, UKG வகுப்புகள் – அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!

0
தமிழக அரசு பள்ளிகளில் மீண்டும் LKG, UKG வகுப்புகள் - அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசு பள்ளிகளில் மீண்டும் LKG, UKG வகுப்புகள் - அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசு பள்ளிகளில் மீண்டும் LKG, UKG வகுப்புகள் – அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!

தமிழக அரசுப் பள்ளிகளில் L.K.G, U.K.G வகுப்புகள் தொடர்ந்து இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த வகுப்புகளை நடத்த தகுதியான சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

L.K.G, U.K.G வகுப்புகள்:

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் கடந்த 2019ம் ஆண்டு மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டது. அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் உள்ள 2,381 அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கபட்டது. இங்கு 3 – 4 வயது குழந்தைகள் எல்கேஜி வகுப்பிலும், 4-5 வயது குழந்தைகள் யுகேஜி வகுப்பிலும் சேர்க்கப்பட்டனர். இந்த எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் ஆங்கில வழி கற்றல் என்பதால் அரசு எதிர்பார்த்த அளவு மாணவர் சேர்க்கையும் அதிகரித்தது. தொடக்கக் கல்வித் துறையிலிருந்து ஆசிரியர்கள் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்த பணி மாற்றம் செய்யப்பட்டனர்.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் 100% தள்ளுபடி – அமைச்சர் ஹாப்பி நியூஸ்!

அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு 2,381 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் L.K.G, U.K.G வகுப்புகள் தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் சுமார் 7 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அரசுப் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் கூடுதலாக 3,000 வகுப்புகள் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடைபெறாது என்று தகவல்கள் வெளியானது.

Exams Daily Mobile App Download

இதனால் L.K.G, U.K.G., வகுப்புகளை அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து நடத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைக்கிணங்க, அரசுப் பள்ளிகளில் L.K.G., U.K.G., வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கென தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவையான இடங்களில் நியமிக்கப்படுவர் என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!