கண்ணனை வீட்டில் சேர்த்து கொள்வாரா மூர்த்தி? பாரதி கண்ணம்மா முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் வரை! டாப் கமெண்ட்ஸ்!

0
கண்ணனை வீட்டில் சேர்த்து கொள்வாரா மூர்த்தி? பாரதி கண்ணம்மா முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் வரை! டாப் கமெண்ட்ஸ்!
கண்ணனை வீட்டில் சேர்த்து கொள்வாரா மூர்த்தி? பாரதி கண்ணம்மா முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் வரை! டாப் கமெண்ட்ஸ்!
கண்ணனை வீட்டில் சேர்த்து கொள்வாரா மூர்த்தி? பாரதி கண்ணம்மா முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் வரை! டாப் கமெண்ட்ஸ்!

தினசரி சீரியல்களின் ப்ரோமோ மற்றும் அதற்கான ரசிகர்களின் கமெண்டுகள் குறித்து இந்த பதிவில் காண்போம். இந்த கமெண்டுகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

டாப் கமெண்ட்ஸ்:

சின்னத்திரையில் எத்தனை சேனல்கள் இருந்தாலும் சீரியல் ஹிட் ஆகி ரசிகர்கள் மனதை கவர்வது என்னமோ.. விஜய் டிவி மற்றும் சன் டிவி தான். மற்ற சேனல்களின் சீரியல்கள் என்ன தான் தனக்கென ரசிகர்களை இழுத்தாலும் ஹிட் வரிசையின் பின்னால் தான் உள்ளது. தற்போதைய கால கட்டத்தில் அனைத்து வயதினரும் சீரியல் பார்க்க தொடங்கி விட்டனர். இதனால் ப்ரோமோக்கள் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பப்பட்டு வருகிறது. ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் அளித்து வரும் கமெண்டுகளுக்கு தற்போது அதிக வரவேற்பு உள்ளது.

ரோஜா:

தற்போது புதிதாக ரோஜாவை கடத்துவது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் 1000 ரோஜா கலந்த கலவை ஆகும் இதில் உள்ள பாடல்கள் உள்ளன என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் வருசம் முழுவதும் ஒரே கதை தான் கடத்துறது காப்பாத்துறது கடத்துறது… ரிப்பீட்டு…. கதை எழுத கற்பனைக்கு பஞ்சமென்றால் நாடகத்தை முடித்து விடலாம் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் என்ன அர்ஜுன் இப்படி ‌கண்ண கட்டி வைத்து கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுரிங்க ரோஜா வ ஏதாவது செய்ய போராங்க எங்களுக்கு கொஞ்சம் பயமா இருக்கும் இல்ல என்று கேட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

மீனா கடையில் திருடிய பையன் குறித்து அவரது அப்பாவிடம் காட்டி கொடுத்துள்ளது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அப்பாடா கதிர் இப்போ இந்த பிரச்சனையில் இருந்து தப்பிச்சிட்டாரு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் மீனா சூப்பர் என்று கூறியுள்ளார்.

‘செம்பருத்தி’ ஷபானாவுடனான திருமணத்திற்கு பின்பு ஆர்யன் வெளியிட்ட பதிவு – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

மேலும் ஒரு ரசிகர் இப்போ ஜனார்த்தனனுக்கு உண்மை தெரிஞ்சதுனு கண்ணனுக்கு தெரியுமா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் மீனாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் என்னதான் கண்ணன் தப்பு பண்ணலனு சொன்னாலும் மூர்த்தி என்ன வீட்லயா சேர்த்துக்க போறாரு என்று கேட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி:

ஜெனி செழியனுக்கு காப்பி போட்டு தருவது போல் ப்ரோமோ வந்துள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இப்போதான் செழியன் ஜெனி ஜோடி சூப்பரா இருக்கு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் என்ன செழியன் டோட்டல் சேஜ் ஆகிட்டீங்க சூப்பர் சூப்பர் என்று கூறியுள்ளார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் குமரனுக்கு வழங்கப்பட்ட விருது – நண்பர் விவேக் பிரசன்னாவுடன் சந்திப்பு!

மற்றொரு ரசிகர் என்ன ஜெனி நீங்க வேலைக்கு போகலையாக என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளனர்.

ராஜா ராணி 2:

அர்ச்சனா புதிதாக சரவணன் கடையில் ஏதோ கோல்மால் செய்வது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் எப்போதான அர்ச்சனா திருந்த போகுதே தெரியல.. அது திருந்தலானும் பரரவாயில்லை சிவகாமிகிட்ட மாட்டிவிடுங்க டைரக்டர் சார் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் என்ன டைரக்டர் சார் நல்லா இருக்க குடும்பத்துல இப்படி பண்றீங்களே இது நல்லாவா இருக்கு என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அர்ச்சனாவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பாரதி கண்ணம்மா:

கண்ணம்மா மற்றும் பாரதி இருவரும் சேர்ந்து பள்ளிக்கு வந்து குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுப்பது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஆஹா என்ன ஒரு அருமையான காட்சி இதுக்குதான் இவ்வளவு நாளா காத்திருந்தோம் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் என்ன பாரதி உங்களுக்கு கோவம் வருதா என்று ஒருவர் கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இப்படியே போனா என்ன அர்த்தம் சீக்கிரம் டிஎன்ஏ டெஸ்ட் எடுங்க என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாரதி டிஎன்ஏ டெஸ்ட் குறித்து கேட்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!