வீட்டை விற்பதை நினைத்து வருத்தப்படும் மூர்த்தி, சண்டைக்கு வந்த பார்வதி, மல்லி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
வீட்டை விற்பதை நினைத்து வருத்தப்படும் மூர்த்தி, சண்டைக்கு வந்த பார்வதி, மல்லி - இன்றைய
வீட்டை விற்பதை நினைத்து வருத்தப்படும் மூர்த்தி, சண்டைக்கு வந்த பார்வதி, மல்லி - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
வீட்டை விற்பதை நினைத்து வருத்தப்படும் மூர்த்தி, சண்டைக்கு வந்த பார்வதி, மல்லி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி இத்தனை வருடம் வாழ்ந்த வீட்டை விட்டு போவதை நினைத்து வருத்தப்படுகிறார். ஆனால் மீனா பெயர் மட்டும் தான் மாறுகிறது. மத்தபடி இது நம்ம வீடு தான் என சொல்கிறார். பின் கஸ்தூரி வந்து பார்வதியிடம் மீனாவின் அப்பா வீட்டை வாங்க இருப்பதாக சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி வீட்டை விற்க போகிறோம் என நினைத்து அண்ணாச்சியிடம் சொல்லி வருத்தப்படுகிறார். பின் அண்ணாச்சி என்ன செய்வது உன் அப்பா ஆசையாக கட்டிய வீடு என சொல்ல, ஆனால் என்ன இதை விட பெரிய வீடு கட்டி போங்க என சொல்கிறார். பின் மீனா மாமா இந்த வீட்டின் பெயர் தான் மாறி இருக்கிறது. நாம எப்போ நினைத்தாலும் வீட்டிற்கு வந்து செல்லலாம் என சொல்கிறார். ஆனால் தனம் வீட்டை விற்பதாக இருந்தால் அதெல்லாம் நினைக்க கூடாது என சொல்கிறார்.

பின் என் அப்பா தான் இப்படி சொன்னதாக மீனா சொல்கிறார். மறுபக்கம் முல்லை கடையில் இருக்க மல்லியும் பார்வதியும் வருகிறார்கள். அவர்கள் என்ன இன்னும் பிரியாணி இருப்பதாக சொல்ல, முல்லை அதெல்லாம் இரவு விற்றுவிடும் என சொல்கிறார். அப்போது கஸ்தூரி வந்து மீனாவின் அப்பா தான் மூர்த்தி அண்ணன் வீட்டை வாங்க இருப்பதாக சொல்கிறார். உடனே முல்லை அம்மா குறைந்த விலைக்கு வாங்கி ஏமாற போறார்கள், இப்போது வீடு ஜீவா பெயருக்கு தான வரும் என முல்லை அம்மா கேட்கிறார். இதை சும்மா விட கூடாது என சொல்ல, முல்லை நீ இந்த விஷயத்தில் தலையிடாதே என சொல்கிறார்.

Exams Daily Mobile App Download

ஆனால் முல்லை அம்மா கேட்காமல் நியாயத்தை கேட்க கிளம்புகிறார். மறுபக்கம் ஐஸ்வர்யா வேலை செய்யவில்லை என மீனா குறை சொல்ல ஐஸ்வர்யாவிற்கு கஸ்டமர் ஒருவர் வருகிறார். மேலும் ஜீவாவும் வர கஸ்டமர் இருப்பதால் ஜீவாவால் நடக்க கூட முடியவில்லை, உடனே மீனாவிற்கு கோவம் வருகிறது. பின் ஜீவா கதிர் ஹோட்டலிற்கு செல்கிறார். அவர் கதிரை சந்தித்து பேச ஜீவா அண்ணன் சொல்ல சொன்னதாக வீட்டை விற்பது பற்றி பேசுகிறார். நாளைக்கு பதிவு செய்ய இருப்பதாகவும், நீ 11 மணிக்கு வந்துவிடு என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

கோபியை நினைத்து வருத்தப்படும் பாக்கியா, திருமணம் பற்றி தெரிந்து அதிர்ச்சியில் தாத்தா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

பின் தனம் ஐஸ்வர்யாவின் வேலை நன்றாக இருந்ததாக சொல்ல, மீனா வேண்டும் என்றே வம்பிழுக்கிறார். தனம் மீனா உன்னை கிண்டல் செய்வதாக சொல்ல அப்போது முல்லையின் அம்மாவும், மல்லியும் வருகின்றனர். பார்வதி வந்ததும் சண்டையை தொடங்குகிறார். மூர்த்தி எங்கே என கேட்க, அவங்க கடைக்கு சென்று இருக்காங்க என்ன விஷயம் என தனம் கேட்க, விஷயத்தை சொல்லாமல் மூடி மறைக்கலாம் என நினைக்கிறீர்களா என கேட்கிறார். என்ன சொல்கிறீர்கள் என தனம் கேட்க, எல்லாரும் வீட்டை ஜீவா பெயருக்கு எழுதி கொடுக்கிறீர்களா என கேட்கிறார். மீனா அப்படி யார் சொன்னா என கேட்க, உடனே மல்லி யார் சொன்ன என்ன? உண்மையா இல்லையா என கேட்க இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here