சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி உயர்வு – ரூ.810 ஆக நிர்ணயம்!!

0
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி உயர்வு - ரூ.810 ஆக நிர்ணயம்!!
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி உயர்வு - ரூ.810 ஆக நிர்ணயம்!!
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி உயர்வு – ரூ.810 ஆக நிர்ணயம்!!

நாடு முழுவதும் ஒரே மாதத்தில் சமையல் சிலிண்டர் விலை 100 ரூபாய் அதிகரித்துள்ளதால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

சிலிண்டர் விலை ஏற்றம்:

நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றை கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை கணக்கீடு செய்கிறது.

TN Job “FB  Group” Join Now

இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அதே போல கேஸ் சிலிண்டர் விலை மாதம் ஒரு முறை அதிகரித்து வருகிறது. ஆனால் தற்போது ஒரு மாதத்தில் இரண்டு முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த மாதத்தில் சிலிண்டர் விலை 4 ஆம் தேதி ரூ.25 அதிகரித்தது. மீண்டும் 15 அம தேதி ரூ50 அதிகரித்து 785 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

தமிழக ஆர்.டி.ஓ அலுவலக ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் – உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!

தற்போது மீண்டும் இன்று ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 14.2 கிலோ எடை கொண்ட மானிய விலை சிலிண்டரின் விலை ரூ.810க்கு விற்கப்படுகிறது. இந்த மாதத்தில் 3 முறை சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை – பிரதமர் மோடி வருகை எதிரொலி!!

இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதே இந்த விலை உயர்வுக்கு காரணம், வருகிற மாதங்களிலும் விலை ஏற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது”, இவ்வாறு தெரிவித்தனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!