எஸ்.ஐ தேர்வின் இறுதி விடைகுறிப்பில் குளறுபடி – ஐகோர்ட் கிளை அதிரடி

0
எஸ்.ஐ தேர்வின் இறுதி விடைகுறிப்பில் குளறுபடி - ஐகோர்ட் கிளை அதிரடி
எஸ்.ஐ தேர்வின் இறுதி விடைகுறிப்பில் குளறுபடி - ஐகோர்ட் கிளை அதிரடி

எஸ்.ஐ தேர்வின் இறுதி விடைகுறிப்பில் குளறுபடி – ஐகோர்ட் கிளை அதிரடி

தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 969 காலிப்பணியிடங்களை கொண்ட துணை ஆய்வாளர் பணிகளுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது.

கடந்த ஜனவரி மாதம் 12 மற்றும் 13 தேதிகளில் இந்த 969 காலிப்பணியிடங்களை கொண்ட துணை ஆய்வாளர் பணிகளுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மொத்தம் 1.50 லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதியுள்ளனர்.

ஏற்கனவே இந்த தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் தற்போது இறுதி விடைகுறிப்பில் குளறுபடி இருப்பதாக மற்றுமொரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதாவது முதல் விடைக்குறிப்பு வெளியானபோது சரியான விடையாக கூறப்பட்டவை தற்போது இறுதி விடைக்குறிப்பு வெளியாகும் பொழுது தவறு என குறிப்பிடப்பட்டதால் வேலைவாய்ப்பினையும் அதற்கான சரியான மதிப்பெண்ணையும் பலர் இழந்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட 2 தேர்வர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை தேர்வர்கள் தரப்பு சரி என்றும், இறுதியாக வெளியான விடைக்குறிப்பு தவறானது அல்லது செல்லாது என உத்தரவிட்டு, மேலும் தேர்வர்கள் இருவருக்கும் உரிய வேலைவாய்ப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!