TNUSRB PC தேர்வில் 67 ஆயிரம் பேர் ஆப்சன்ட் – வெளியான அதிர்ச்சி தகவல்!

0
TNUSRB PC தேர்வில் 67 ஆயிரம் பேர் ஆப்சன்ட் - வெளியான அதிர்ச்சி தகவல்!
TNUSRB PC தேர்வில் 67 ஆயிரம் பேர் ஆப்சன்ட் - வெளியான அதிர்ச்சி தகவல்!
TNUSRB PC தேர்வில் 67 ஆயிரம் பேர் ஆப்சன்ட் – வெளியான அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் நேற்று (நவ. 27) நடைபெற்ற சீருடை பணியாளர் தேர்வில் 67 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த அறிவிப்பை சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

சீருடை பணியாளர் தேர்வு:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 3552 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது. அதில் 161 இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் 120 தீயணைப்பாளர் பதவிகள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது குறித்த அறிவிப்பு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் கடந்த ஜூன் 30 ஆம் தேதி வெளியிட்டது. இந்நிலையில் தேர்வர்களுக்கு ஜூலை 7 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

மேலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நவம்பர் 15 ஆம் தேதி ஹால்டிக்கெட் வெளியானது. மேலும் காவலர் பணிக்கான முதல்கட்ட எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் 295 மையங்களில் நேற்று (நவ. 27 ) காலை 10 மணி முதல் மதியம் 12.40 வரை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் உள்ள 3.66 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். அதில் 67000 பேர் இந்த தேர்வு எழுதவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

ராதிகா அலுவலகத்தில் கேட்டரிங் ஆர்டர் வாங்கிய பாக்கியா.. விபத்தில் சிக்கிய இனியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

சுமார் 3.66 லட்சம் பேர் தேர்வை எழுதிய நிலையில் அதில் 2,99,887 பேர் ஆண்களும், 66,811 பேர் பெண்களும், 59 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவார். இந்த தேர்வில் 70 மதிப்பெண்களுக்கு பொது அறிவு கேள்விகளும், 80 மதிப்பெண்கள் தமிழ் தகுதி தேர்வு கேள்விகளும் இடம்பெற்றுள்ளது. பொது அறிவு கேள்விகளும் தமிழிலேயே கேட்கப்பட்டதால் ஆங்கில வழிக் கல்வி படித்தவர்களுக்கு, கேள்விகளை புரிந்து கொள்ள மிகவும் சிரமமாக இருந்ததாக தேர்வை எழுதியவர்கள் தெரிவித்துள்ளனர்.,

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!