அறநிலையத்துறையில் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட TNPSC – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
அறநிலையத்துறையில் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட TNPSC - விண்ணப்பங்கள் வரவேற்பு!
அறநிலையத்துறையில் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட TNPSC - விண்ணப்பங்கள் வரவேற்பு!
அறநிலையத்துறையில் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட TNPSC – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அறநிலையத்துறையில் உள்ள காலிப்பாணியிடங்கள் நிரப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

TNPSC அறிவிப்பு:

TNPSC ஆணையம் நடப்பு ஆண்டின் படி தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. முன்னர் அரசு பணி நியமனங்களில் முறைகேடுகள் நடைபெற்றதை போல், இனி வரும் காலங்களில் நடக்காது என்று அரசு உறுதி அளித்துள்ளது. தேர்வுகள் மற்றும் தேர்வு செய்யும் விதிமுறைகளின் படி அனைத்து பதவிகளும் நிரப்பப்பட்டு வருகின்றது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில்,அறநிலையத்துறையில் மண்டல ஸ்தபதி மற்றும் உதவி ஸ்தபதி போன்ற பணிகளுக்கு 48 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், மண்டல ஸ்தபதி பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் மரபு கட்டிட கலைத்தொழில்நுட்பத்தில் இளநிலை தொழில்நுட்ப பட்டம் அல்லது மரபு சிற்ப கலையில் இளநிலை நுண்கலை பட்டம் முடித்து 10 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும் என்றும், ஆகஸ்ட் 1, 2022ன் படி 40 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்றும், தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.25,000 ஊதியம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் தளர்வு.. இயல்பு நிலைக்கு திரும்பும் சீனா!

Follow our Instagram for more Latest Updates

இதேபோல், உதவி ஸ்தபதி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், மரபு கட்டிட கலைத்தொழில்நுட்பத்தில் இளநிலை தொழில்நுட்ப பட்டம் அல்லது மரபு சிற்ப கலையில் இளநிலை நுண்கலை பட்டம் முடித்து 10 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும் என்றும், மாதம் ரூ.20,000 சம்பளமாக அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை 20.01.2023க்குள் “ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, 119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை- 600 034” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!