நாராயணர் மற்றும் அவரது அவதாரங்கள்

0

நாராயணர் மற்றும் அவரது அவதாரங்கள்

 • பஞ்சசன்யம் என்ற சங்கை முழக்கி உலகை படைக்கிறார்.
 • சுதர்சன சக்கரம் — அழித்தல் தொழில்.
 • அபயகரம் — காத்தலைக் குறிக்கும்.
 • கதாயுதம் — உலக சுக துக்கங்களை தடுக்கும் தன்மை.
 • நந்தகம் எனும் வாள் — அஞ்ஞானம் அழிக்க.
 • சாரங்கம் என்ற வில் — அடியார்க்கு நேரும் தீவினை தடுக்க.
 • கௌஸ்துப மணி — அந்தராத்மாவை உணர்த்துகிறது.
 • வத்சம் என்ற மரு — பிராதனத்தை உணர்த்தும்.
 • பாலாழியில் படுத்திருப்பது — தூய உள்ளத்திலே அமர்தலைக் குறிக்கும்.
 • ஆதிசேஷனின் மேல் சயனம் — (அனந்தன் – முடிவில்லாதவன்) உலக முடிவில் சேஷனாகிய தாமோகுணம் கொண்டு உலக அழிவை குறிக்கும்.
 • தாங்காமல் தாங்கி சுகம் பெறும் நிலை — விஷ்ணுவின் சயனம்
 • லட்சுமியை அருகில் வைத்து யோகம் நிஷ்டை கொண்டது – ஐம்புலன் அடக்கத்தை
  குறிக்கும்.

தசாவதாரங்கள்

 • தசாவதாரங்கள் எடுக்க காரணம் – நல்லோரை ரட்சித்து, துஷ்டர்களை அழிக்க.

மச்சவதாரம் (மீன்)

 • ஹயக்கீரீவன் வேதத்தை கடலில் ஒளித்ததால்.

கூர்ம அவதாரம் (ஆமை)

 • மந்திர மலையை மத்தாக, வாசுகி பாம்பை கயிறாக கொண்டு பாற்கடலை கடையும்
  போது மந்திரமலை சாய, ஆமை அவதாரமெடுத்து அதனை நிலைநிறுத்தினார்.

வராகவதாரம் (பன்றி) 

 • ஹிரண்யாசூரன்(ஹிரண்யாசூரன்), பூமியை சுருட்டி கடலில் ஒளித்ததால் அதை மீட்க.

நரசிங்கவதாரம்
• ஹிரண்யகசிபுவின் அகங்காரத்தால் மகன் ‘பிரகலாதன்” கடவுள் எங்குமிருப்பார் என
கூற, தூணை அசுரன் உதைக்க அதிலிருந்து நரசிம்மர் வெளிப்பட்டு அவனை கொன்றார்.

வாமன அவதாரம் (குள்ளன்)

 • மகாபலி அசுரன் தேவர்களுக்கு துன்பம் தர வாமன அவதாரமெடுத்து அவன் தலையில் கால் வைத்து பூமியில் அமிழ்த்தினார்.

பரசுராம அவதாரம்

 •  தந்தையை கொன்ற கார்த்தவீரியனைக் கொன்றார்.

தசரத ராம அவதாரம்

 • குருவாக்கிய பரிபாலனம் — கொடிய செயல்களை செய்த தடாகை அரக்கியை குரு விஸ்வாமித்ரர் சொன்னதால் கொன்றார்.
 • தந்தை வாக்கிய பரிபாலனம் – தசரதன் கைகேயிடம் கொடுத்த வரத்தை நிறைவேற்ற
  வனவாசம் செய்தார்.
 • சகோதர அன்பு — வனவாசம் செல்வது கண்டு பரதன், இராமனை நாடாள அழைக்க,
  மறுத்து தேற்றியனுப்பதிலும், குகன், சுக்ரீவன், வீபீஷணன் ஆகியோரிடமும் சகோதர அன்பைக் காட்டினான்.
 • ஏகபத்தினி விரதம் – சூர்ப்பனகை வலுவில் வந்து மணம்புரிய வேண்டியதை மறுத்தது.
 • வாலி வதம் — சுக்ரீவன் மனைவியை, வாலி தனதாக்கி கொண்டதால், சுக்ரீவன் இராமனை அணுகியதால், வாலியை கொன்றார்.

பலராம அவதாரம்

 • இவர் ஆதிசேஷனின் அம்சம். கண்ணனுக்கு முன் பிறந்தவர். கண்ணனின் லீலையில் உடனிருந்தவர்.

கிருஷ்ணாவதாரம்

 • வாசுதேவர் – தேவகிக்கு மகனாக பிறப்பு — ஆயர்பாடி நந்தகோபன்-யசோதா புத்திரனாக வளர்ப்பு.
 • கோகுல நந்தன் – கோகுலத்தில் 16 வயது வரை வளர்ந்தான்.
 • பூதனை பாலுடன், விஷமும் ஊட்ட அவளைக் கொன்றான்.
 • வெண்ணெய் திருடியது – பால் போன்ற சுத்தமும், வெண்ணெய் மிருதுவான அடியார்க்கு அருளுவான்
 • கோபியர் சேலைகளை கவர்ந்தது – மான அபிமானங்களை கைவிட்டு இறைவனை அடைவோருக்கு முக்தியருளப்படுவதைக் குறிக்கிறது.
 • குழலூதி மயக்கியது – ஜீவாத்மா, பரமாத்மாவை அடைவதைக் குறிக்கிறது.
 • துவராகா நந்தன் :- துவாரகைக்கு அரசனானதும், சிசுபாலன், கம்சன் ஆகியோரை அழித்தது. துரியோதனனிடம் பாண்டவர்க்காக தூது சென்றது.
 • பார்த்தசாரதி — அர்ஜூனனுக்கு தோரோட்டியாகி கீதையை உபதேசித்தது.

கல்கியவதாரம் — கலியின் முடிவில் தர்மத்தை நிலைநாட்ட எடுக்க இருப்பது.

PDF Download

TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

TNPSC Current Affairs in Tamil 2018

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!