TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

2
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - உடனே பாருங்க!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - உடனே பாருங்க!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

தமிழகத்தில் அரசுப் பணிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பாடத்திட்டத்தை தற்போது இணையதளத்தில் TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்மொழி தகுதித்தேர்வு:

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரிய தகுதியான நபர்கள் TNPSC தேர்வாணையம் நடத்தும் குருப்-1, குருப்-2 மற்றும் 2-ஏ, குருப்-4 உள்ளிட்ட 32 வகையான தேர்வுகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இத்தேர்வுகளில் அதிக அளவில் வடமாநிலத்தவர்கள் தேர்ச்சி பெற்று வந்தனர். இதனால் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு குறைந்த அளவு பணியிடங்களே கிடைத்தது. அதனால் தமிழக அரசு இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக தற்போது TNPSC நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஓமைக்ரான் பரவலை தடுக்க தீவிர கட்டுப்பாடுகள் – மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்!

அதன்படி தமிழ்மொழி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் தேர்வர்களின் இதர வினாத்தாள் மதிப்பீடு செய்யப்படும். மேலும் குருப்-4 தேர்வில் மட்டும் தான் தமிழ்மொழி தகுதித் தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் தரவரிசை பட்டியலில் கணக்கிட பயன்படுத்தி கொள்ளப்படும். குருப்-1, குருப்-2 மற்றும் 2-ஏ போன்ற தேர்வுகளில் தமிழ்மொழி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதுமானது. அத்துடன் TNPSC தேர்வாணையம் நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துனருக்கு கூடுதல் அதிகாரம் – பெண் பயணிகள் பாதுகாப்பு!

குருப்-4 மற்றும் ஒரே நிலை கொண்ட தேர்வில் தமிழ்மொழி தகுதித் தேர்வானது கொள்குறி வகையில் கேட்கப்படும். இதையடுத்து இரண்டு நிலை தேர்வுகளை கொண்ட குருப்-1, குருப்-2 மற்றும் 2-ஏ தேர்வுகளில் இத்தகுதி தேர்வானது விரிவாக விடையளிக்கும் வகையிலும் கேட்கப்படும். அத்துடன் தமிழ் மொழி தகுதி தேர்வுக்கான பாடத் திட்டங்களையும், மாதிரி வினாத்தாள்களையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் www.tnpsc.gov.in இணையத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் இந்த இணையதளத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்வுகளுக்குக்கான வருடாந்திர தேர்வுகால அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!