TNPSC Group 5 தேர்வு அறிவிப்பு வெளியீடு – செப்.21 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
TNPSC Group 5 தேர்வு அறிவிப்பு வெளியீடு - செப்.21 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
TNPSC Group 5 தேர்வு அறிவிப்பு வெளியீடு - செப்.21 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
TNPSC Group 5 தேர்வு அறிவிப்பு வெளியீடு – செப்.21 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!

குரூப் 5ஏ தகுதித்தேர்விற்கான அறிவிப்பை TNPSC தற்போது வெளியிட்டுள்ளது. மேலும், இந்த தேர்விற்கு இன்றில் இருந்து செப்டம்பர் 21 ஆம் தேதி வரைக்கும் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குரூப் 5ஏ தேர்வு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தகுதி தேர்வின் அடிப்படையில் நிரப்பி வருகிறது. இந்நிலையில், 5413 காலியிடங்களுக்காக நடத்தப்பட்ட குரூப் 2, 2A தேர்வு கடந்த மே 21 ஆம் தேதி நடத்தப்பட்டது. மேலும், 7382 காலிப்பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 24ஆம் தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து குரூப் 5ஏ தேர்வு குறித்தான அறிவிப்பு எப்போது வெளியாகும் என விண்ணப்பதாரர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், குரூப் 5ஏ தகுதித்தேர்வு குறித்தான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள சென்னை தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட 161 பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், குரூப் 5ஏ தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இன்றில் இருந்து செப்டம்பர் 21 ஆம் தேதி வரைக்கும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வாணையம் முக்கிய தகவல்!

அதாவது, விருப்பமும் தகுதியும் பெற்றவர்கள் http://tnpsc.gov.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று புதிதாக பதிவு செய்பவர்கள் பதிவு கட்டணமாக ரூ.150 ம், தேர்வு கட்டணமாக ரூ.100ம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குரூப் 5ஏ தகுதித்தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் செப்டம்பர் 28 ஆம் தேதி வரைக்கும் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குரூப் 5ஏ தேர்விற்கான எழுத்து தேர்வு வரும் டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!