TNPSC Group 4 & VAO தேர்வர்களுக்கான முழு மாதிரி தேர்வு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
TNPSC Group 4 & VAO தேர்வர்களுக்கான முழு மாதிரி தேர்வு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TNPSC Group 4 & VAO தேர்வர்களுக்கான முழு மாதிரி தேர்வு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TNPSC Group 4 & VAO தேர்வர்களுக்கான முழு மாதிரி தேர்வு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து TNPSC GROUP 4 VAO தேர்வுக்கான முழு மாதிரி தேர்வை இன்று ( ஜூலை 21) நடத்த உள்ளன. இது குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

TNPSC Group 4 VAO தேர்வு:

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். கொரோனா தாக்குதலால் அரசால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. தற்போது நிலைமை கட்டுக்குள் வந்து உள்ளதால், நடப்பு ஆண்டு ஆரம்பத்திலிருந்தே போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்ப, TNPSC குரூப் 4 தேர்வை நடத்தி வருகிறது. மேலும் TNPSC குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்பு அடிப்படையில் 7382 பணியிடங்கள் இந்த தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்நிலையில் குரூப்-4 போட்டித் தேர்வுக்காக ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் நோக்கில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி வலைத்தளமான, எங்கள் EXAMSDAILY வலைதளத்தில் நாள்தோறும் மாதிரி ஆன்லைன் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. மேலும் குரூப் 4 & VAO தேர்வுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் புதிய பாடத்திட்டத்தின்படி குரூப் 4 & VAO முழு மாதிரி தேர்வை எங்கள் EXAMSDAILY வலைதளம் நடத்தி வருகிறது.

இதன் அடிப்படையில் இன்று (ஜூலை 21) காலை குரூப் 4 & VAO முழு மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான Answer Key இன்று (ஜூலை 21 ) மாலை எங்கள் ExamsDaily வலைதளத்தில் வெளியிடப்படும். எனவே குரூப்-4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் இந்த முழு மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TNPSC Model Question Paper – 04

Answer Sheet 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!