TNPSC Group 2 & 2A தேர்வர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை – OMR தாளை சரியாக நிரப்பும் முறை!

0
TNPSC Group 2 & 2A தேர்வர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை - OMR தாளை சரியாக நிரப்பும் முறை!
TNPSC Group 2 & 2A தேர்வர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை – OMR தாளை சரியாக நிரப்பும் முறை!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC Group 2 & 2A தேர்வுகளை மே 21ம் தேதி நடத்த உள்ளது. இதற்கான அறிவிப்புகள் வெளியான நிலையில், தேர்வின் OMR தாளை தவறில்லாமல் எவ்வாறு சரியாக நிரப்புவது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

TNPSC OMR தாள்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 மற்றும் 2A நிலைகளுக்கான பதவிகளுக்கு உள்ள 5,000 க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்து மார்ச் மாதம் தேர்வாணையம் அறிவித்தது. இந்த தேர்விற்கு விண்ணப்ப செயல்முறைகள் ஏப்ரல் மாதம் முடிவடைந்த நிலையில், மொத்தம் 14 லட்சம் பேர் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. இத்தேர்வானது மே 21ம் தேதி நடக்க உள்ள நிலையில், தேர்வுக்கான நுழைவு சீட்டும் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் தேர்வினை முதல் முறை எழுத உள்ள தேர்வர்கள் OMR தாளை நிரப்புவது குறித்த பதட்டத்தில் இருப்பார்கள். OMR தாளை தவறாக நிரப்பினால் மதிப்பெண் குறைக்கப்படும் என்று தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தவறில்லாமல் சரியான முறையில் எவ்வாறு OMR விடைத்தாளை நிரப்புவது என்பது குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

OMR விடைத்தாளை நிரப்பும் வழிமுறைகள்:

  • தேர்வு விடைத்தாள் 2 பக்கங்களை கொண்டது. முதல் பக்கத்தில் OMR செயல் படிவம் இருக்கும். 2ம் பக்கத்தில் தேர்வில் தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய மற்றும் OMR தாளை நிரப்பும் முறை குறித்த 13 வழிமுறைகள் இருக்கும். அவை அனைத்தையும் முதலில் நன்றாக படித்து விட்டு, அந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள கையெழுத்து இடும் பகுதியில் சரியான முறையில் கையெழுத்து போட வேண்டும். கையெழுத்து இல்லாத விடைத்தாள்கள் நிராகரிக்கப்பட்டு விடும்.
  • பின்னர் விடைத்தாளில் உள்ள உங்களது தேர்வு எண், புகைப்படம், பெயர், நீங்கள் தேர்வெழுதும் பதவி, பாடம், போன்ற அனைத்து விவரங்களும் சரியான முறையில் உள்ளதா என்பதை முதல் 10 நிமிடங்களுக்குள் சோதித்து தேர்வு அறையின் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும். 10 நிமிடங்களுக்கு பின்னர் நீங்கள் தவறாக இருப்பதாக கூறினால் உங்கள் விடைத்தாளை நிராகரித்து விடுவார்கள்.

  • தேர்வு அறைக்குள் கருப்பு நிற பால்பாயிண்ட் பேனா மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். அதை வைத்து மட்டுமே OMR தாளை நிரப்ப வேண்டும்.
  • OMR தாளின் பகுதி 1ல் உங்களது இடது கையின் கட்டை விரல் ரேகையை, அதற்காக கொடுக்கப்பட்டுள்ள தனிக் கட்டத்தில் தேர்வு முடிந்த பின்னர் பதிவு செய்ய வேண்டும். தேர்வின் ஆரம்ப பகுதியில் இதை செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • அதேபோல், குறிப்பிட்ட பகுதியை விட்டு கைரேகை வெளியே செல்லக் கூடாது. அவ்வாறு வெளியே சென்றால் உங்கள் மொத்த மதிப்பெண்ணில் இருந்து 2 மதிப்பெண் குறைக்கப்படும்.
  • உங்களின் விடைத்தாளில் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வினாத்தாளின் தொகுப்பு எண்களை முறையாக அதற்காக பகுதி 2ல் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் பதிவிட்டு அவற்றை ஷேட் செய்ய வேண்டும். இதை சரியாக செய்யாத பட்சத்தில் நீங்கள் பெற்ற மொத்த மதிப்பெண்ணில் இருந்து 5 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
  • வினாவிற்கான விடைகளை நிரப்பும் போது ஒரு கேள்விக்கு ஒரு வட்டத்தை மட்டுமே நிரப்ப வேண்டும். 2 கட்டங்களையோ அல்லது நிர்ப்பமாலோ விடக்கூடாது. உங்களுக்கு அதற்கான விடைகள் தெரியவில்லை என்றால் விடைத்தாளில் ஒவ்வொரு எண்ணிலும் உள்ள E என்ற வட்டத்தை நிரப்ப வேண்டும். இதை சரியாய் செய்யாத பட்சத்தில் 2 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

தமிழகத்தில் பூஸ்டர் கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடுவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

  • OMR தாளை முறையாக நிரப்புவது குறித்து இந்த பக்கத்தில் முறையாக படத்துடன் விளக்கப்பட்டிருக்கும், சந்தேகங்கள் இருப்பின் அவற்றை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
  • அடுத்ததாக உங்களது OMR விடைத்தாளில் மொத்தம் உள்ள 200 விடைகளில் எத்தனை A, B, C, D மற்றும் E வட்டங்களுக்கு முறையாக விடை அளித்து உள்ளீர்கள் என்பதை பகுதி 3ல் கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் முறையாக நிரப்ப வேண்டும்.
  • மொத்தம் எத்தனை விடைகளை எந்த எந்த கட்டங்களில் நிரப்பி உள்ளீர்கள் என்பதை நிரப்பிய பின்னர், அவற்றை எண்களிலும் பதிவு செய்ய வேண்டும். அவை முழுவதுமாக 200 என்று வந்தால் மட்டுமே உங்கள் விடைத்தாள் மதிப்பிடப்படும்.
  • இவற்றை தவிர தேர்வு மைய கண்காணிப்பாளர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள கட்டங்களில் தேவை இல்லாமல் எதையும் எழுதவோ, குறிக்கவோ கூடாது.
  • இறுதியாக உங்களின் OMR தாளில் அனைத்தையும் சோதித்து பார்த்து விட்டு கையெழுத்து போட வேண்டிய இடங்களில் முறையாக கையெழுத்து போட்டிருப்பதை சோதித்துக் கொள்ள வேண்டும்.

    TNPSC Online Classes

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!