TNPSC Group 1 திருக்குறள் Study Material

1
TNPSC Group 1 திருக்குறள் Study Material
TNPSC Group 1 திருக்குறள் Study Material

TNPSC Group 1 திருக்குறள் Study Material

குரூப் 1 தேர்வில் திருக்குறள் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என படக்குறிப்பில் குறிப்படப்படுள்ளது. இப்பகுதியில் திருக்குறள் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

Download TNPSC Group 1 2020 Exam Date 

Download TNPSC Group 1 Syllabus

திருக்குறள்

இலக்கியம் பாடத்தொகுப்பு:

  • திருக்குறள் – திரு + குறள்
  • இரண்டு அடிகளாலான குறள் வெண்பாக்களால் ஆனது.
  • திருக்குறளை திருவள்ளுவர் எழுதினார்.
  • திருக்குறள் முப்பால்களை கொண்டது. அவை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆகியவை ஆகும்.
  • திருக்குறள் 133 அதிகாரங்களையும் 1330 குறள்களையும் கொண்டது.
  • திருக்குறளில் பத்து அதிகாரப் பெயர்கள் உடைமை என்னும் சொல்லில் அமைத்துள்ளன. திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது.
  • உலக மொழியில் உள்ள அறநூல்களில் முதன்மையானது திருக்குறள். இது பதினென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • உலக மொழிகளில் பல மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள். நூற்றெழு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  • ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’ இதில் நாலு என்பது நாலடியாரையும், இரண்டு என்பது திருக்குறளின் அருமையையும் விளக்குகிறது.
  • மலையச்துவசன் மகன் ஞானப்பிரகாசம் 1812-இல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டார்.

Download TNPSC Group 1 Previous Year Question Paper

சிறப்புப் பெயர்கள்:

  1. உலகப் பொதுமறை
  2. முப்பால்
  3. வாயுறை வாழ்த்து
  4. பொதுமறை
  5. பொய்யாமொழி
  6. தெய்வநூல்
  7. தமிழ்மறை
  8. முதுமொழி
  9. உத்தரவேதம்
  10. திருவள்ளுவம்
  • திருவள்ளுவ மாலை என்பது திருக்குறளின் பெருமை குறித்துச் சான்றோர் பலர் பாடிய பாக்களின் தொகுப்பாகும்.
  • திருக்குறளுக்கு சிறந்த உரை எழுதியவர் பரிமேலழகர் (மேலும் பலர் எழுதியுள்ளனர்)
  • அறத்துப்பாலில் – 38 அதிகாரங்கள், பொருட்பாலில் – 70 அதிகாரங்கள், இன்பத்துப்பாலில் – 25 அதிகாரங்கள் உள்ளன.
  • விக்டோரியா மகாராணி, காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல் திருக்குறள்.
  • திருக்குறளுக்கு உரைசெய்த பதின்மர்: தருமர், தாமத்தர், பரிதி, திருமலையர், பரிப்பெருமாள், மணக்குதவர், நச்சர், பரிமேலழகர், மல்லர், காளிங்கர்.
  • திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தவர் – வீரமா முனிவர். ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

திருவள்ளுவர்:

  • திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவரது காலம் கி.மு.31 என்று கூறுவர். இதை தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
  • இவரது ஊர் பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை. இவர் சமண மதத்தைச் சார்ந்தவர் என்பது உறுதி.
  • திருவள்ளுவர் செஞ்ஞாப்போதார், தெய்வப் புலவர், நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபாங்கி, பெருநாவலர், பொய்யில் புலவர் என பல சிறப்புப் பெயர்களால் போற்றப்படுகிறார்.
  • கிறிஸ்து ஆண்டு (கி.பி.) 31 – திருவள்ளுவர் ஆண்டு. எ.கா: 2013  31 – 2043 (கி.பி. 2013ஐ திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்.)
  • திருக்குறளின் பெருமையை உணர்ந்த வீரமாமுனிவர் இலத்தீனிலும், ஜி.யு.போப் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தனர்.
  • இந்நூல் உலக மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
  • திருவள்ளுவமாலை என்னும் நூல் இதன் பெருமைக்கும்ää சிறப்புக்கம் சான்றாக திகழ்கிறது.
  • உருசிய நாட்டில் அணு துளைக்காத கிhரம்ளின் மாளிகையில் உள் சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் திருக்குறளும் இடம் பெற்றுள்ளது.
  • இங்கிலாந்து நாட்டுக் காட்சிச் சாலையில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது. ‘வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே’ என்றும் ‘இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே’ என்றும் பாவேந்தர் பாரதிதாசன் திருக்குறளைப் போற்றிப் புகழ்ந்துள்ளார்.
  • மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் 1812ல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டார்.
  • திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது.
  • திருக்குறள் ஏழு சீர்களால் அமைந்த வெண்பாக்களைக் கொண்டது.
  • ஏழு என்னும் எண்ணுப்பெயர் எட்டுக் குறட்பாக்களில் இடம் பெற்றுள்ளது.
  • அதிகாரங்கள் 133 இதன் கூட்டுத்தொகை ஏழு.
  • மொத்த குறட்பாக்கள் இதன் கூட்டுத் தொகையும் ஏழு.

திருவள்ளுவமாலை:

ஆசிரியர் குறிப்பு:

  • பெயர் – கபிலர்
  • காலம் – கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவரென்றும்ää சங்க காலத்திற்கு பின் வாழ்ந்தவர் என்றும் கூறுவர்.

நூல் குறிப்பு:–

  • திருக்குறளின் சிறப்பினை உணர்த்த திருவள்ளுவமாலை என்னும் நூல் எழுந்தது.
  • இந்நூலில் ஐம்பத்தைந்து பாடல்கள் உள்ளன.
  • ஐம்பத்துமூன்று புலவர்கள் பாடியுள்ளனர்.
  • திருவள்ளுவ மாலை “திணையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்டபனையளவு காட்டும் படித்தால்; – மனையளகு வள்ளைக்(கு) உறங்கும் வளநாட! வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி”.கபிலர்

பத்தொன்பது அதிகாரங்கள்

  1. அன்புடைமை
  2. பண்புடைமை
  3. கல்வி
  4. கேள்வி
  5. அறிவு
  6. அடக்கம்
  7. ஒழுக்கம்
  8. பொறையுடைமை
  9. நட்பு
  10. வாய்மை
  11. காலம்
  12. வலி
  13. ஒப்புரவறிதல்
  14. செய்ந்நன்றி அறிதல்
  15. சான்றாமை
  16. பெரியரைத் துணைக்கோடல்
  17. பொருள் செயல்வகை
  18. வினைத்திட்பம்
  19. இனியவை கூறல்

அன்புடைமை

1. அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
    புன்கணீர் பூசல் தரும்.

பொருள்: அன்பை அடைத்து வைக்க தாழ்ப்பாள் இல்லை அன்புக்குரியவரின் துன்பத்தைப் பார்த்ததுமே நம் அன்புää கண்ணீராக வெளிப்பட்டு நிற்கும்.

2. அன்பில்லார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு

பொருள்: அன்பில்லாதவர் எல்லாப் பொருளும் தமக்கு மட்டும் உரியது என்னு எண்ணுவர் அன்பு எடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.

3. அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு
    என்போடு இயைந்த தொடர்பு

பொருள்: உடம்போடு உயிர் இணைந்து இருப்பதைப் போல, வாழ்க்கை நெறியோடு அன்பு இணைந்து இருக்கிறது.

4. அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
     நண்புஎன்னும் நாடாச் சிறப்பு

பொருள்: அன்பு விருப்பத்தைத் தரும். விருப்பம் அனைவரிடமும் நட்புக்கொள்ளும் பொரும்சிறப்பைத் தரும்.

5. அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு

பொருள்: அன்போடு பொருந்திய வாழ்க்கை நெறியைக் கடைப்பிடித்தவர் உலகத்தில் மகிழ்ச்சி உடையவர் ஆவர்.

பண்புடைமை

1. எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
    பண்புடைமை என்னும் வழக்கு

பொருள்: யாரிடத்தும் எளிமையாகப் பழகினால் பண்புடைமை என்னும் நன்னெறியை அடைதல் எளிது.

2. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
    பண்புடைமை என்னும் வழக்கு

பொருள்: அன்புடையவராகத் திகழ்தல், உயர்ந்த குடிப்பிறப்பு ஆகிய இவ்விரண்டும் பண்பாளரின் இயல்பு.

3. உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
   பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு

பொருள்: உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று,  பொருந்தத்தக்க பண்பால் ஒத்திருத்தலே மக்களாகக் கொள்ளத்தக்க ஒப்புமையாகும்.

4. நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
    பண்புபா ராட்டும் உலகு.

பொருள்: நேர்மையையும் அறத்தையும் கொண்டு பிறருக்கு உதவுதல் வேண்டும். அத்தகைய பண்பாளரையே உலகம் போற்றும்.

5. நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
    பண்புள பாடறிவார் மாட்டு

பொருள்: விளையாட்டாக ஒருவரை இகழ்ந்து பேசுதலும் துன்பத்தைத் தரும். பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிருப்பினும் நல்ல பண்புகள் இருக்கும்.

கல்வி

1. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

பொருள்: நூல்களைக் குற்றமறக் கற்றல் வேண்டும். கற்றபடி நடத்தல் வேண்டும்.

2. எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
     கண்என்ப வாழும் உயிர்க்கு

பொருள்: எண்ணும் எழுத்தும் ஆகிய இவ்விரண்டும் மனிதர்களுக்கு இரு கண்கள் எனக் கூறுவர்.

3. கண்உடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
    புண்உடையார் கல்லா தவர்

பொருள்: கல்வி கற்றவர் கண் உடையவர் கல்லாதவர் முகத்தில் இரண்டு புண்ணுடையவர் ஆவர்.

4. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்

பொருள்: அறிவில் சிறந்த புலவர்களுடன் பேசிப் பழகும்போது மகிழ்ச்சியாக இருப்பதும், அவர்களை விட்டுப்பிரியும்போது, ‘இனி இவரை எப்பொழுது காண்போம்’ என எண்ணிப் பிரிவதும் புலவரின் இயல்பாகும்.

5. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
    கடையரே கல்லா தவர்

பொருள்: செல்வம் உடையவர்மன் ஏழை கவலைப்பட்டு இரந்து நிற்பதுபோலக் கற்றவர்முன் பணிந்து கற்பவரே உயர்ந்தவர் பணிந்து கல்லாதவர் தாழ்ந்தவர்.

கேள்வி

1. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
     செல்வத்தள் எல்லாம் தலை.

பொருள்: செல்வங்களுள் சிறந்தது சிறந்து கேள்விச் செல்வம். அதுவே செல்வங்கள் அனைத்திலும் முதன்மையானது.

2. செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
     வயிற்றுக்கும் ஈயப் படும்.

பொருள்: செவிக்குணவாகிய நல்லறிவு கிடைக்காத பொழுதில் வயிற்றுக்கும் சிறிதளவு உணவு அளிக்கப்படும்.

3. செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின்
   ஆன்றாரோ டொப்பர் நிலத்து

பொருள்: செவி உணவாகிய கேள்வியினை உடையவர் இவ்வுலகில் வாழ்ந்தாலும், அவர் அவி உணவைக் கொண்டு தேவர்களுக்கு ஒப்பாவர்.

4. கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்(கு)
    ஒற்கத்தின் ஊற்றாந் துணை

பொருள்: ஒருவன் கற்க வாய்ப்பு இல்லாமல் இருந்தாலும் கற்றாரிடம் சென்று கேட்டறிய வேண்டும். வாழ்க்கையில் தளர்ச்சியுறும்போது அக்கேள்வியறிவானது அவனுக்கு ஊன்றுகோல் போலத் துணையாக நிற்கும்.

5. இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
   ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்

பொருள்: வழுக்குகின்ற நிலத்தில் ஊன்றுகோல் உதவுவதுபோல நல்லொழுக்கம் மிக்க பெரியோரின் வாய்ச்சொற்கள் வாழ்க்கைக்கு என்றும் உதவும்.

அறிவுடைமை

1. அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
    உள்ளழிக்க லாகா அரண்

பொருள்: அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.

2.சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
   நன்றின்பால் உய்ப்ப தறிவு

பொருள்: மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.

3. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.

பொருள்: எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப்பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.

4. எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
     நுண்பொருள் காண்ப தறிவு

பொருள்: தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமானப் பொருளையும் ஆராய்ந்து காண்பதே அறிவாகும்.

5. உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
    கூம்பலும் இல்ல தறிவு.

பொருள்: உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கி கொள்வது சிறந்த அறிவு, முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாத அறிவு.

மேலும் கூடுதல் குறிப்புகளை அறிய கீழ் உள்ள இணைப்பில் PDF -பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் 

திருக்குறள் PDF Download

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. TNPSC தேர்வுக்கு இந்த 19 அதிகாரங்கள் மட்டும் படித்தால் போதுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!