TNPSC வனத்தொழில் பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் – ரூ.1,38,500 வரை சம்பளம்! முழு விவரங்கள் இதோ!

0
TNPSC வனத்தொழில் பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் - ரூ.1,38,500 வரை சம்பளம்! முழு விவரங்கள் இதோ!
TNPSC வனத்தொழில் பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் - ரூ.1,38,500 வரை சம்பளம்! முழு விவரங்கள் இதோ!
TNPSC வனத்தொழில் பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் – ரூ.1,38,500 வரை சம்பளம்! முழு விவரங்கள் இதோ!

தமிழ்நாடு வன சார்நிலைப் பணி துறையில் காலியாக உள்ள வனத்தொழில் பழகுநர் பதவி குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 6 தான் கடைசி தேதி என்பதால் அதற்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு வன சார்நிலைப் பணி துறையில் காலியாக உள்ள பணியிடம் குறித்தான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, வனத்தொழில் பழகுநர் பணியில் மொத்தமாக 10 காலி பணியிடம் இருக்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தகுதித்தேர்வின் அடிப்படையிலேயே தகுதியான தேர்வாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். எழுத்துத்தேர்வில் தேர்வானவர்களுக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் வாய் மொழி தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், வனத்தொழில் பழகுநர் பதவிக்கான எழுத்து தேர்வு டிசம்பர் 3 ஆம் தேதி முதல் டிசம்பர் 13 ஆம் தேதி வரைக்கும் நடைபெற இருக்கிறது.

TN Job “FB  Group” Join Now

சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், காஞ்சிபுரம், நாகர்கோவில், மதுரை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், காரைக்குடி, தஞ்சாவூர், உதகமண்டலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய பகுதிகளில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. வனவியல் பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது விவசாயம், கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், கணினி பயன்பாடுகள், கணினி அறிவியல், வேளாண் பொறியியல், சுற்றுச்சூழல் அறிவியல், புவியியல், தோட்டக்கலை, கடல் உயிரியல், கணிதம்,இயற்பியல், புள்ளிவிவரங்கள், வனவிலங்கு உயிரியல், விலங்கியல் ஆகிய பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Reliance Jio பயனர்களுக்கான ஹாப்பி நியூஸ் – 30 நாட்களுக்கான ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்!

மேலும், விருப்பமும் தகுதியும் பெற்றவர்கள் www.tnpsc.gov.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று ஆன்லைன் மூலமாகவே செப்டம்பர் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரரின் வயது 18 முதல் 32 வரையிலும் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வாகும் திறமையான விண்ணப்பதாரருக்கு ரூ.37,700 – 1,38,500 வரை மாத சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!