TNPSC Civil Judge திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் – சற்றுமுன் வெளியீடு!

0
TNPSC Civil Judge திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் - சற்றுமுன் வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது 2023ம் ஆண்டுக்கென நடைபெற்ற TNPSC Civil Judge தேர்வுக்கான திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளை (Revised List) தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது.

TNPSC திருத்தப்பட்ட தேர்வு முடிவு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வாயிலாக 2023ம் ஆண்டு Civil Judge பணிக்கென ஒதுக்கப்பட்ட 245 காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது 01.06.2023 அன்று வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இப்பணிக்கான TNPSC Civil Judge முதல் நிலை தேர்வானது 2023 ஆகஸ்ட் 19ம் தேதியன்றும், முதன்மை தேர்வானது 2023 நவம்பர் 4 மற்றும் 5ம் தேதிகளிலும், நேர்காணலானது 2024 ஜனவரி 29 முதல் பிப்ரவரி 10ம் தேதி வரையும் நடத்தப்பட்டது. இதையடுத்து இப்பணிக்காக நடைபெற்ற தேர்வுகளின் இறுதி கட்ட முடிவானது பிப்ரவரி 16ம் தேதியன்று வெளியிடப்பட்டது.

TNPL நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

இத்தேர்வு முடிவை 27.02.2024 அன்று உயர் நீதிமன்றமானது ரத்து செய்து. பிறகு இப்பணிக்கென நடைபெற்ற தேர்வு மதிப்பெண்கள் அனைத்தையும் மறு ஆய்வு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் Civil Judge பணிக்கென திருத்தப்பட்ட தேர்வு முடிவானது இன்று (19.03.2024) வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் எளிமையாக ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இப்பொழுது வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் இடம்பெற்றுள்ள பதிவெண்களின் தேர்வர்களுக்கு விரைவில் பணி நியமனம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!