TNPSC வேதியியல் பாடக்குறிப்புகள் – உரங்கள்

2

உரங்கள்

TNPSC, UPSC பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்

வேதியியல் பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்

உரம்  (fertiliser) என்பது விளை நிலத்தில் உள்ள ஊட்டச்சத்துகளைப் பெருக்கும் பொருட்டு இடப்படுவதாகும். மண்ணில் குறைந்து வரும் இயற்கையான சத்துப் பொருட்களை ஈடு செய்யும் பொருட்டு செயற்கையான சத்துப் பொருளை மண்ணுக்கு ஊட்டுவது ‘உரம்இடுதல்’ ஆகும்.

மண்ணில் நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், கந்தகம், இரும்பு  முதலிய வேதியல் பொருட்கள் கலந்துள்ளன.

இவையே தாவரங்களுக்குத் தேவையான வேதியியல் சத்துப் பொருட்கள் ஆகும். காற்றிலிருந்தும் கூட சத்துப் பொருட்களைத் தாவரங்கள் சேமித்து வளர்கின்றன.

மண்ணில் உள்ள இவ்வியற்கைச் சத்துப் பொருட்கள் தாவரங்களின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு நிலையிலும் உறுதுணை புரிகின்றன.

மூன்று முக்கிய பேரளவு ஊட்டச்சத்துக்கள்:

  1. தாவரத்தின் தண்டும் இலைகளும் நன்கு வளர்ச்சி பெற நைட்ரஜன் பொருட்கள் பெருந்துணை புரிகிறது. தாவரங்களுக்கு நோய் ஏதும் வராமல் காக்கும் கேடயமும் இதுவேயாகும்.
  2. பூக்கள் பூத்துக் குலுங்கவும் காய்கள் நன்கு திரட்சியடையவும் விதைகள் முதிர்ச்சி பெறவும் பாஸ்பேட்டுகள் அவசியம்.
  3. அதே போன்று வேரும் பழமும் வித்தும் திரட்சி பெற பொட்டாஸ் என்னும் சாம்பல் சத்து இன்றியமையாத தேவையாகும்.
உரம் சூத்திரம்ஆசிட் ஆல்கலிஅத்தியாவசிய கூறுகள்
அம்மோனியம் நைட்ரேட் NH 4 NO 3நைட்ரிக் அமிலம் அம்மோனியாநைட்ரஜன்
அம்மோனியம் பாஸ்பேட் (NH 4) 3 PO 4பாஸ்போரி அமிலம் அம்மோனியாநைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ்
அம்மோனியம் சல்பேட் (NH 4) 2 SO 4 கந்தக அமிலம் அம்மோனியாநைட்ரஜன்
யூரியா (NH 2) 2 COநைட்ரஜன்
பொட்டாசியம்நைட்ரேட் KNO 3 நைட்ரிக்அமிலம் பொட்டாசியம் ஹைட்ராக்சைடுபொட்டாசியம் மற்றும் நைட்ரஜன்
  • உரம் தழை (நைட்ரசன்) மணி (பாஸ்பரஸ்), சாம்பல் (பொட்டாசியம்) – முதல் நிலை பேரூட்ட கனிம சத்துகள்.
  • கால்சியம், மக்னீசியம், கந்தகம் –  இரண்டாம் நிலை ஊட்டச் சத்துக்கள்.
  • இரும்பு,மயில்துத்தம், போரான், மாலிப்டினம், தாமிரம், மாங்கனீசு போன்ற தாதுப்பொருட்களையும் நிலத்திற்கு தருகிறது.

உர வகைகள்

  • இயற்கை உரங்கள்
  • பசுந்தாள் உரங்கள்
  • செயற்கை உரங்கள்
  • மண்புழு உரங்கள்

இயற்கை உரங்கள்:

  • மண்ணிற்கு மேலும் வளமூட்ட பொதுவாக மாட்டுச் சாணம், இலை, தழை, எரு, ஆட்டுப் புழுக்கை போன்று இயற்கைக் கழிவுப் பொருட்கள் நிலத்திற்கு உரமாக இடப்படுகின்றன. இவையும் இயற்கை உரங்களே ஆகும்.
  • அன்றாடம் கூட்டிப் பெருக்கும் குப்பைக் கூளங்களை குழியிட்டு கழிவு நீரைப் பாய்ச்சி உரமாக்குவதும் உண்டு. இது கலப்பு உரம் அல்லது தொழு உரம் (கம்போஸ்ட்) என அழைக்கப்படுகிறது.

இயற்கை உர வகைகள்:

  1. விலங்கு எரு அல்லது தொழு உரம்
  • விலங்குகளிலிருந்து பெறப்படும் கழிவுகள் அல்லது கால்நடை வளர்ப்பு வேளாண்மையில், கால்நடைகளிலிருந்து பெறப்படும் கழிவுகளும், அவற்றிற்கான தொழுவங்களிலிருந்து பெறப்படும் கழிவுகளும் இயற்கை உரமாகப் பயன்படுத்தப்படலாம். இவ்வகை கழிவுகளில் தாவர வளர்ச்சிக்குத் தேவையான பல ஊட்டக்கூறுகள் கிடைக்கின்றன.

2. பசுந்தாள் உரம்

  • ஒரு பயிர்ச்செய்கையின்போது, பயிர்களால் மண்ணிலுள்ள ஊட்டக்கூறுகள் பயன்படுத்தப்பட்டு, மண்ணின் வளம் குறைகையில், அதனை ஈடு செய்வதற்காக, வேறொரு பயிரை அந்த நிலத்தில் பயிரிட்டு, பயிர் வளர்ந்த பின்னர், அவற்றை அதே நிலத்தில் உழுது, மண்ணுடன் கலப்பதன் மூலம் மண்ணின் வளத்தைக் கூட்டலாம். இவ்வாறு தாவரங்கள் உரமாகப் பயன்படுத்தப்படும்போது, அது பசுந்தாள் உரம் எனப்படும்.

3. கூட்டெரு

  • கூட்டெரு என்பது மக்கவைக்கப்பட்ட உயிர்சார் பொருள்களைக் குறிக்கும் ஒரு குறிப்பிட்ட வகை இயற்கை உரமாகும். இதில் தொழு உரம் அல்லது எரு, மற்றும் பசுந்தாள் உரம் போன்ற கரிம /சேதனச் சேர்வைகள் கலந்திருக்கும்.

உயிர்சார் பொருள்களிலிருக்கும் நைட்ரஜன் போன்ற ஊட்டப்பொருள்கள், பாக்டீரியாக்களின் உதவியுடன் உருச்சிதைவுக்குட்பட்டு, நிலத்தில் சேர்க்கப்பட்டு, மண் வளத்தைக் கூட்டுவதன் மூலம் இயற்கை உரமாகின்றது. இந்த இயற்கை உரம் தாவரங்களால் பயன்படுத்தப்பட்டு, தாவர வளர்ச்சி நிகழ்கின்றது.

தாவரங்கள்சூரியஒளியிலிருந்து பெறப்படும் ஆற்றலைப் பயன்படுத்தி, ஒளிச்சேர்க்கை மூலம், ஊட்டப்பொருட்களை தம்முள் செறிவாக்கிக் கொள்கின்றன. மேலும் சில பாக்டீரியாக்களின் உதவியுடன் தாவரங்களில் நைதரசன் நிலைப்படுத்தல் நிகழ்கின்றது.

செயற்கை உரங்கள்:

  • சத்திழக்கும் மண்ணுக்கு மேலும் வளமூட்ட இயற்கை உரங்களின் தன்மைகளைக் கொண்ட செயற்கை உரங்களை வேதியியல் அடிப்படையில் தொழிற்சாலைகளில் தயாரிக்கிறார்கள். இவற்றை செயற்கை உரங்கள் என்கிறோம்.
  • செயற்கைஉரங்கள்  நைட்ரசன் (தொழிற்சாலையிலும்), பாஸ்பரஸ், பொட்டாசியம்  போன்ற வேதியியல் பொருளினின்றும் தயாரிக்கப்படுகிறது.
  • நிலத்தின் தன்மை விளைவிக்கப்படும் பயிரின் இயல்பு, தட்பவெப்ப சூழ்நிலை ஆகியவற்றைப் பொறுத்து தேவைப்படும் சத்தை எவ்வகை உரத்தின் மூலம் பெறுவது என்பதைத் தீர்மானித்து அவ்வகை உரத்தை நிலத்திற்கு இடவேண்டும்.
  • அளவுக்குமீறியஉரமிடுவதால், நிலம், பயிர் மற்றும் உணவு ஆகியவை நச்சுத் தன்மையடைவதுடன் அதிகப்படியான உரங்கள் அல்லது உரங்களிலுள்ள தேவையற்ற பொருட்கள் பாசன நீரால் கழுவிச்செல்லப்பட்டு ஆறுகளிலும் நீர் நிலைகளிலும் தேங்குகிறது. அவற்றிலுள்ள வேதியியற் கனிமங்களினால்நீர் நிலைகளும் நச்சுத் தன்மை அடைகின்றன. மேலும், கழிவிலுள்ள நைட்ரேட் நைதரசன் மற்றும் அதிகப்படியான ஊட்டச் சத்துக்கள் நீர் நிலைகளில் பாசிப் பெருக்கதிற்கும் (algal bloom) அதனால் ஏற்படும் ஆக்சிஜன் குறைவிற்கும் (eutrophication) காரணமாகின்றது.
  • உரங்களில் இருந்து கிடைக்கும் கழிவுப் பொருட்களை நீர்நிலைகளில் சேர்ப்பதற்கு முன், உயிரியல் முறையில் நைட்ரேட்டுகளாக மாற்றியோ அல்லது நைதரசனை அகற்றியோ சூழல் மாசடையாது ஓரளவு காக்கமுடியும்.

பசுந்தாள் உரம்:

  • பசுந்தாள் உரம் இயற்கை வேளாண்மையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நைட்ரஜன் போன்ற மூலப்பொருள், சேதனப் பொருட்களை நிலஊட்டல் மூலம் மண்ணிற்கு வழங்குவதற்கு இம்முறை உதவுகிறது.
  • செயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் உண்டாகும் நீர், மண் மாசுபாடு இம்முறையால் தடுக்கப்படுகிறது.
  • பொதுவாக அவரை இனத் தாவரங்கள் இவ்வகையான பசுந்தாள் உரமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
  • அவரையினத் தாவரங்களின் வேர்களில் உள்ள கணுக்களில் Rhizobia பாக்டீரியாவின் உதவியுடன் நைதரசன் நிலைப்படுத்தல் நிகழ்வதனால், அவை நைதரசன் செறிவான தாவரங்களாக இருக்கின்றன. எனவே இவை மீண்டும் மண்ணில் சேர்க்கப்படும்போது, பயிர்களுக்கு அத்தியாவசியமான தாதுப்பொருளான நைதரசன் மண்ணில் சேர்க்கப்பட்டு மண்ணின் வளம் கூடுகின்றது.
  • கொழுஞ்சி, சணப்பை, எருக்கு, புங்கம், நுணா, வேம்பு, பூசரவு மற்றும் ஆடாதொடா ஆகியவை பொதுவாகப் பயன்படுத்தப்படும் பசுந்தாள் உரங்கள் ஆகும்.
  • இவற்றுள் கொழுஞ்சி, சணப்பை போன்ற செடிகள் வேளாண் நிலத்தில் பயிரிடப்பட்டு, அவை வளர்ந்து பூக்கும் முன்னரே அப்படியே உழுது நிலத்துடன் சேர்க்கப்படுகின்றன.
  • நிலத்தில் இந்த பருவத்தில் பசுந்தாள் உரம் இடுவது அடுத்த பருவத்தின் விளைச்சலில் முன்னேற்றம் தரும் என்று நம்பப்படுகிறது.

மண்புழு உரம்:

  • மண்புழு உரம் (vermicompost) திடக்கழிவு மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • இயற்கையில் கிடைக்கும் விவசாயக் கழிவுப் பொருள்களான சாணம், இலை, தழை போன்றவற்றை உள்கொண்டு எச்சங்களை சிறுசிறு உருண்டைகளாக மண்புழுக்கள் வெளியேற்று வதையே மண்புழு உரம் என்கிறோம்.
  • இதில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து ஆகிய அத்தனையும் இருக்கிறது.45 முதல் 60 நாளில் மண்புழு உரம் உற்பத்தியாகிவிடும்.
  • உலகத்தில் மண்புழுக்களில் 3000 வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் இந்தியாவில் 384 வகைகள் உள்ளன. இதில் 6 வகையான மண் புழுக்கள் உரம் தயாரிக்க உகந்தவை.
  • பெரும்பாலும் உரம் தயாரிக்க சிவப்பு ஊர்ந்தி எனப்படும்(எயசெனியா பெடிடா (Eisenia foetida), எயசெனியா ஆண்ட்ரி (Eisenia andrei) மற்றும் லும்ப்ரிகஸ் லுபெல்லஸ்(Lumbricus rubellus) ) மண்புழு இனங்கள் பயன்படுத்தப்படுகிறது.

PDF Download

 

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!