2016 TNPSC குரூப் 4 VAO தேர்வு முறைகேடு – உயர்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி!

0
2016 TNPSC குரூப் 4 VAO தேர்வு முறைகேடு - உயர்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி!
2016 TNPSC குரூப் 4 VAO தேர்வு முறைகேடு - உயர்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி!
2016 TNPSC குரூப் 4 VAO தேர்வு முறைகேடு – உயர்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி!

தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் – 4 தேர்வில் முறைகேடு நடந்தது குறித்து உயர்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.

குரூப் – 4 தேர்வு முறைகேடு:

தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வுகள் மூலம் தெரிவு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுகிறது. அந்த வகையில் VAO மற்றும் குரூப் – I முதல் V வரை பல்வேறு துறைகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் VAO மற்றும் குரூப் – IV தேர்வானது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அடிப்படையில் நடத்தப்படும். அதனால் இந்த இரண்டு தேர்வுகளை மட்டும் லட்சக்கணக்கானோர் எழுதுவார்கள்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – 96 நாடுகள் அங்கீகாரம்!

மேலும் இந்த இரண்டு தேர்வுகளுமே எழுத்தேர்வை மட்டும் அடிப்படையாக கொண்டு பணி நியமனம் செய்யப்படும். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த குரூப் – 4 தேர்வு TNPSC ஆல் நடத்தப்படும். அவ்வாறு நடத்தப்படும் தேர்வில் கடந்த சில ஆண்டுகளாக முறைகேடு நடந்து வருகிறது. அதனால் கஷ்டப்பட்டு தேர்வுக்கு படித்து தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி கடந்த 2016 ஆம் ஆண்டு TNPSC ஆல் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

அவ்வாறு தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த விசாரணையின் போது நீதிபதிகள் ATM இல் பணம் நிரப்பும் வாகனத்துக்கு தரப்படும் பாதுகாப்புகளை குரூப் 4 தேர்வு விடைத்தாள்களுக்கு தராதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் குரூப் 4 தேர்வை 16 லட்சம் பேர் எழுதிய நிலையில் வெறும் 118 பேர் மட்டுமே தேர்வில் தவறு செய்தவர்களா? என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!