TNHRCE இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2023 – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி || சம்பளம்: ரூ.50,000!

0
TNHRCE இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2023 - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி || சம்பளம்: ரூ.50,000!
TNHRCE இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2023 - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி || சம்பளம்: ரூ.50,000!
TNHRCE இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2023 – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி || சம்பளம்: ரூ.50,000!

தருமபுரி, இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, அலுவலக உதவியாளர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 11.03.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TNHRCE தருமபுரி
பணியின் பெயர் அலுவலக உதவியாளர்
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
TNHRCE தருமபுரி காலிப்பணியிடங்கள்:

அலுவலக உதவியாளர் பதவிக்கு என மொத்தம் 7 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01.01.2023 அன்று விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

HDB Financial-நிறுவனத்தில் வேலை வேண்டுமா? சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!!

இந்து சமய அறநிலையத்துறை பதவிக்கான கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

அலுவலக உதவியாளர்- ரூ.15,700 – ரூ.50,000/-

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கூறிய தகுதியுள்ள இந்து சமயத்தைச்‌ சார்ந்தவர்கள்‌ 11.03.2023 மாலை 5.30 மணிக்குள்‌ ஆவணங்களின்‌ நகல்களில்‌ சான்றிட்டும்‌ புகைப்படத்துடன்‌ சுயவிலாசமிட்ட ரூ.25/-க்கான தபால்‌ தலை ஒட்டிய கவர்‌ ஒன்றுடன்‌ கீழ்கண்ட முகவரிக்கு உரிய விண்ணப்பத்தில்‌ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்‌. இருப்பிட முகவரி, அஞ்சல்‌ குறியீட்டு எண்‌, கைபேசி எண்‌ ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்‌. குறிப்பிட்ட தேதிக்குள்‌ வரப்பெறாத விண்ணப்பம்‌ நிராகரிக்கப்படும்‌.

விண்ணப்பங்கள்‌ அனுப்ப வேண்டிய முகவரி:

உதவி ஆணையர்‌,
இந்து சமய அறநிலையத்துறை,
செங்குந்தர்‌ திருமணம்‌ மண்டப வளாகம்‌,
பென்னாகரம்‌ ரோடு, குமாரசாமிப்பேட்டை,
தருமபுரி மாவட்டம்‌ – 636 701.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!