தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் கிடையாது – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

1
தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் கிடையாது - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் கிடையாது - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் கிடையாது – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்த மாவட்ட கல்வி அலுவலர் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், 9, 10, 11ம் வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கு எந்த தேர்வும் கிடையாது என பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வுகள் அறிவிப்பு:

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், கடந்த ஆண்டை போல் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது. மேலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3 முதல் பொதுத்தேர்வு நடைபெறும் எனவும், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வுகளில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் தீவிரமாக செய்து வருகிறது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் இறுதி வாரத்திற்குள் தேர்வு நடத்தி மதிப்பெண்களை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் குழப்பமடைந்தனர். தற்போது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பில், 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் கிடையாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தற்போது பரவி வரும் நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி தேர்வு நடத்தப்படாது என கூறப்பட்டு உள்ளது. இரு வேறு விதமான அறிவிப்புகள் வெளியாகி உள்ளதால் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதில் பள்ளிக்கல்வித்துறை தலையிட்டு உரிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Students of 12th standard, who are from the poor family background depends on their mark for higher studies. If government cancel or ask school to conduct internal test and submit the mark for 12 th standard students too. There will be lot of malpractice in schools while entering the mark and this will lead the poor students life as question mark. We hear the heart beat of very poor students, who study well. They want 12 th board exam to be conducted as planned in a fair manner.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!