வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – நாளை (டிச. 16) கடைசி நாள்!
வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) சார்பில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் படி இந்த பணியில் சேர விருப்பமும் தகுதியும் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- வேலைவாய்ப்பு தேடுவோருக்கு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) சார்பில் Senior Research Fellow, Junior Research Fellow பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
- அதன் படி மேற்கண்ட பணிகளுக்கு மொத்தம் 3 காலியிடங்கள் இருப்பதாக தற்போது வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
- இந்த பணிக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc, BE/ B.Tech, M.Sc என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் இந்த பணிகளுக்கான வயது வரம்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
- அது மட்டுமில்லாமல் தற்போது வெளியிட்டுள்ள பணிகளில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.20,000/- முதல் ரூ.31,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் சேர விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC தேர்வுகளுக்கான Best Study Material – சிறந்த தள்ளுபடி விலையில்!!
விண்ணப்பிக்கும் முறை:
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Senior Research Fellow, Junior Research Fellow பணியில் சேர விருப்பமும் தகுதியும் இருப்பவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 16.12.2022ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும்.