தமிழகத்தில் 3500 + ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – பட்டதாரிகள் அதிர்ச்சி  !

1
தமிழகத்தில் 3500 + ஆசிரியர் காலிப்பணியிடங்கள்
தமிழகத்தில் 3500 + ஆசிரியர் காலிப்பணியிடங்கள்

தமிழகத்தில் 3500 + ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – பட்டதாரிகள் அதிர்ச்சி  !

தமிழ்நாடு ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது பிப்ரவரி மாதத்தில் முதுகலை உதவியாளர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் தரம் -1 மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, தமிழகத்தில் மொத்தம் 3,696 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

2020 ஆம் ஆண்டில் கொரோனா நோய் தொற்று காரணமாக எந்த அரசு பணியிடங்களும் நிரப்பபட உள்ளன. தற்போது நோய் தொற்று குறைந்து வரும் காரணத்தால் தமிழக அரசில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப மாதம்தோறும் அறிவிப்பு வெளியாகி வருகிறது.

ஆன்லைன் பதிவு தள்ளிவைப்பு:

தமிழ்நாடு ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் இந்த ஆண்டு முதுகலை உதவியாளர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர் பதவிக்கு பி.எட், எம்.எஸ்.சி, எம்.இ/ எம்.டெக் முடித்த தகுதியான விண்ணப்பத்தார்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பால், வேலையில்லாத பட்டதாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். டி.ஆர்.பி மூலம் 3500 + மேற்பட்ட பணியிடங்கள் ஆன்லைன் மூலம் நிரப்பப்பட இருந்த நிலையில், தற்போது தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இந்த ஆன்லைன் பதிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் வருத்தம்:

ஏற்கனவே அறிவித்த, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பதிவு இன்னும் சரிசெய்யப்படாத நிலையில் அடுத்தாக அறிவிக்கப்பட்ட சிறப்பு ஆசிரியர் பணிகளுக்கான ஆன்லைன் பதிவும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், பட்டதாரிகள் அனைவரும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

பட்டதாரிகள் விருப்பம்:

இது குறித்து பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும்,” தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த ஆன்லைன் விண்ணப்பப் பதிவுகள் இன்னும் முறையாக்கப்படாமல் உள்ளது. இதனால் தேர்வை தள்ளி வைப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கலாம். உடனே தாமதிக்காமல் ஆன்லைன் விண்ணப்ப பதிவை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. நான் பதிவு பண்ணியது1999 ஜுலை… இப்ப வயது 45 இனி நான் என்ன பண்ண….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!