TN TET தேர்விற்கு விண்ணப்பிக்காதவர்கள் கவனத்திற்கு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு !

0
TN TET தேர்விற்கு விண்ணப்பிக்காதவர்கள் கவனத்திற்கு - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு !
TN TET தேர்விற்கு விண்ணப்பிக்காதவர்கள் கவனத்திற்கு - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு !
TN TET தேர்விற்கு விண்ணப்பிக்காதவர்கள் கவனத்திற்கு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு !

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இரண்டாம் முறை நீடிக்கப்பட்ட இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

TN TET தேர்வு:

மார்ச் 7, 2022 அன்று தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) 2022 க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பின் படி, மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி 5 மணி வரை ஆன்லைன் மூலம் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இதுவரை இந்த தேர்வுக்கு சுமார் 4.50 லட்சம் பேர் விண்ணப்பித்ததாகக் கூறப்படுகிறது. தகுதி தேர்வுக்கு கால அளவை நீட்டிக்க கோரிக்கை வந்ததை அடுத்து ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் – TN TET தாள் I (I முதல் V வகுப்புகளுக்கு) மற்றும் TN TET தாள் II (6 முதல் VIII வகுப்புகளுக்கு). TN TET 2022 தேர்வு தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க எவ்வித வயது வரம்பு கட்டுப்பாடும் கிடையாது. முதல் மற்றும் இரண்டாம் தாளில் 150 வினாக்கள் இடம்பெறும். இதில் பெரும்பாலும் குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல், மொழிப்பாடம் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும்.

ExamsDaily Mobile App Download

நாளையுடன் இந்த தேர்வுக்கான ஆன்லைன் பதிவானது முடிவடைய உள்ளதால், இன்னும் விண்ணப்பிக்காதவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. டெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இனியும் நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லாத, காரணத்தால் தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் விரைந்து விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification

Download Last Date Extended Notice

Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!