தமிழக பள்ளிகளில் 12,327 பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம்? முதல்வரிடம் கோரிக்கை!

1
தமிழக பள்ளிகளில் 12,327 பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம்? முதல்வரிடம் கோரிக்கை!
தமிழக பள்ளிகளில் 12,327 பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம்? முதல்வரிடம் கோரிக்கை!

தமிழக அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வாக்குறுதி அளித்தார். இதனை நிறைவேற்ற வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பணி நிரந்தரம்:

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் தொடர்ந்து தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. கடந்த 15ம் தேதி தொடங்கி 20ம் தேதி இளங்கலை ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற்றது. முதன் முதலாக இத்தேர்வு கணினி வாயிலாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் அரசு உயர்நிலை பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களும் நடைபெற்றது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கலெக்டர் வெளியிட்ட முக்கிய தகவல் – இதை கட்டாயம் செய்யுங்கள்!!

இந்த நிலையில் தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய கோரிக்கைகள் எழுந்து வருகிறது. கடந்த 2012ம் ஆண்டு தமிழக அரசுப்பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், இசை உள்ளிட்ட பாடங்களுக்கு சுமார் 16, 549 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதில் தற்போது 12,327 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தற்போது ரூ.10,000 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

இவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று சட்டமன்ற தேர்தலின் போது முக ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று பகுதி நேர ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அவர்கள் ராஜஸ்தான், ஒடிசா, பஞ்சாப், ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். அதே போல தமிழகத்திலும் பள்ளிக்கல்வி துறையில் தற்காலிகமாக பணிபுரிந்து வரும் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

1 COMMENT

  1. தகுதி தேர்வு வைத்து தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே கல்வி தரம் நல்லா இருக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!