அடேங்கப்பா.. 2023ல் தமிழக பள்ளிகளுக்கு 70 நாட்கள் விடுமுறையா? – ஹாப்பி நியூஸ்!

0
அடேங்கப்பா.. 2023ல் தமிழக பள்ளிகளுக்கு 70 நாட்கள் விடுமுறையா? - ஹாப்பி நியூஸ்!
அடேங்கப்பா.. 2023ல் தமிழக பள்ளிகளுக்கு 70 நாட்கள் விடுமுறையா? - ஹாப்பி நியூஸ்!
அடேங்கப்பா.. 2023ல் தமிழக பள்ளிகளுக்கு 70 நாட்கள் விடுமுறையா? – ஹாப்பி நியூஸ்!

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு தற்போது பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டு கொண்டிருக்கிறது. சமீபத்தில் தான் வர இருக்கும் 2023ம் ஆண்டுக்கான அரசினர் விடுமுறை குறித்த பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி தற்போது பள்ளிகளுக்கு எவ்வளவு நாட்கள் விடுமுறை விடப்படும் என்ற விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

பள்ளி விடுமுறை:

தமிழகத்தில் கடந்த வருடங்களில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் 2022-2023ம் ஆண்டில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ளது. ஆனாலும் அண்மையில் பருவமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

கடந்த அக்டோபர் மாதம் 2023ம் ஆண்டுக்கான மாநில அரசு விடுமுறை குறித்த பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி அடுத்த ஆண்டில் 23 நாட்கள் அரசினர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையானது பள்ளிகளுக்கும் அளிக்கப்படும். மேலும் பொதுவாகவே பள்ளிகளுக்கு இதை தவிர காலாண்டு தேர்வு விடுமுறையாக அக்டோபர் மாதத்தில் 7 முதல் 10 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்படும். இதே போன்று அரையாண்டு தேர்வு விடுமுறையாக டிசம்பர் மாதத்தில் 7 முதல் 10 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்படும்.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை – வானிலை மையம் வெளியிட்ட தகவல்! எச்சரிக்கை மக்களே!

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து, முழு ஆண்டு தேர்வு விடுமுறையாக ஏப்ரல் அல்லது மே மாதத்தில் 1 மாதம் வரை விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பருவமழை காரணமாகவும் மற்றும் ஒரு சில மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை காரணமாகவும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இதன் அடிப்படையில் பள்ளிகளுக்கு அடுத்த ஆண்டில் (2023) கிட்டத்தட்ட 70 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!