10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா?

0
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா?

தமிழகத்தில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 4 பேர் குணமடைந்துள்ளனர். இருப்பினும், கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. நான்காவது நிலையை அடைந்து வருவதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த இதை தவிர வேறு வழியே இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்து விட்டார்

இப்படியான சூழலில் தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கேள்விக் குறியாகியுள்ளது. முன்னதாக கடந்த மார்ச் 21 ஆம் தேதி, சட்டசபையில் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஏப்ரல் 15 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் என்றார். கொரோனா வைரஸ் தீவிரத்தை பார்க்கும் போது, ஏப்ரல் 14 தேதிக்கு பிறகும் ஊரடங்கு உத்தரவு நீடிக்கும் என்றே கருதப்படுகிறது.

இது தொடர்பாக கல்வித்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதில் இரண்டு விதமான சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்தனர். ஒன்று தேர்வின்றி தேர்ச்சி முறையில், 10 ஆம் வகுப்பு மாணவர்களை ஆல் பாஸ் செய்வது. அப்படி இருக்கும் போது, மாணவர்களின் அரையாண்டு, காலாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் பாஸ் செய்ய முடியும். ஆனால், இவ்வாறு செய்தால் மாணவர்களின் மதிப்பெண்னை அந்தந்த பள்ளி நிர்வாகமே தீர்மானிக்கும் சூழல் உருவாகி விடும்.

இரண்டாவது, ஒரு வேளை தேர்வின்றி தேர்ச்சி முறை கொண்டு வந்தால், அடுத்தாக 11 ஆம் வகுப்பில் எந்த பாடப்பிரிவில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. 10 ஆம் வகுப்பில் பெறும் மதிப்பெண்னை வைத்தே, 11 ஆம் வகுப்பில் மாணவர் சேர்க்கை நடத்துவது வழக்கம். எனவே, தேர்வின்றி தேர்ச்சி முறை கொண்டு வந்தால், மேற்கொண்டு பாலிடெக்னிக், அட்மிஷன், 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை சிக்கலாகி விடும்

எனவே, இதே போன்று தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சற்று காலத்தாமதமாக நடப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்வு முடிந்த உடனையே, தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு 11 ஆம் வகுப்பு, டிப்ளமோ தொழிற்படிப்பு அட்மிஷன் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் தமிழக கல்வித்துறை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரையில், மாணவர்கள் தொடர்ந்து 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகும்படி அறிவுறுத்துப்படுகிறார்கள்.

அதிகப்படியான தகவல்களை எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!