TN MRB ரூ.62,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க பிப்.09 கடைசி நாள்..!
கிராம சுகாதார செவிலியர் (VILLAGE HEALTH NURSE) மற்றும் துணை செவிலிய மருத்துவர் (AUXILIARY NURSE MIDWIFE) பணியிடங்களை நிரப்ப தமிழக மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இப்பணிக்கு ஆன்லைன் முறையில் மாற்றுத் திறனாளிகளுக்குச் சொந்தமான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.எனவே ஆர்வமுள்ளவர்கள் 09.02.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Village Health Nurse/Auxiliary Nurse Midwife பணிக்கென மொத்தம் 9 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- SSLC தேர்ச்சியுடன் 18 மாத Auxiliary Nurse Midwife / Multipurpose Health Workers course முடித்திருக்க வேண்டும்.
- 01.07.2022 தேதியின் படி, விண்ணப்பதார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 42 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ST/SCA/ BC / BCM / MBC&DNC விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 59 க்குள் இருக்க வேண்டும்.
சிறந்த coaching centre – Join Now
- விண்ணப்பதார்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
- மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு Pay Matrix Level – 8 ன் படி மாதம் ரூ.19,500 – 62,000 /- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
- SC / SCA / ST / DAP(PH) / DW விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
http://mrbonline.in/ என்ற இணைய முகவரி மூலம் 20.01.2022 முதல் 09.02.2022 வரை விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.