தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் இரவு & வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் ரத்து? முதல்வர் இன்று ஆலோசனை!

0
தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் இரவு & வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் ரத்து? முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் இரவு & வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் ரத்து? முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் இரவு & வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் ரத்து? முதல்வர் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய முதல்வர் முக ஸ்டாலின் இன்று (ஜன.27) ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இந்த கூட்டத்தில் ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வு

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா 3ம் அலைத்தொற்று மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நோய் தொற்று நிமித்தமாக ஜனவரி 31ம் தேதி வரை மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி பொது முடக்கம் ஆகிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர பள்ளிகள் கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் முழுமையாக மூடப்பட்டு மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே போல திருமணங்கள், இறப்பு நிகழ்வுகள், மத வழிபாட்டு தலங்கள், திரையரங்குகள் ஆகியவற்றுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய கட்டுப்பாடுகள் மூலம் தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு மெல்ல மெல்ல சரிய துவங்கி இருக்கிறது. அதுவும் கடந்த 3 நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் கீழே குறைந்திருக்கிறது. தவிர இந்த கொரோனா 3ம் அலைத்தொற்றால் ஒவ்வொரு நாளும் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வந்தாலும், மருத்துவமனை அனுமதி, உயிரிழப்பு போன்றவை மிகவும் குறைவாகவே பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று (ஜன.27) ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

Post Office இல் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – ‘பான்’ எண் பதிவேற்றுவத்தில் கவனம்!

முதல்வரின் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசுத்துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை வல்லுனர்கள், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இந்த கூட்டத்தில் புதிய கொரோனா கட்டுப்பாட்டுகள் அல்லது தளர்வுகளை அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இப்போது, தமிழகத்தில் குறைந்தபட்ச கட்டுப்பாடுகள் கொண்ட மினி ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் அதே வேளையில் இரவு நேர ஊரடங்கு அல்லது ஞாயிறு ஊரடங்கு ஆகியவற்றில் இருந்து ஏதாவது ஒரு தளர்வுகள் இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!