தமிழகத்தில் ஓரிட சேவை மையத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு! நவ.15 கடைசி நாள்!

0
தமிழகத்தில் ஓரிட சேவை மையத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு! நவ.15 கடைசி நாள்!
தமிழகத்தில் ஓரிட சேவை மையத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு! நவ.15 கடைசி நாள்!
தமிழகத்தில் ஓரிட சேவை மையத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு! நவ.15 கடைசி நாள்!

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் செயல்படுகின்ற ஓரிட சேவை மையத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் உலக வங்கி நிதியுதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம், ஊரக தொழில்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் வருமானத்தை பெருக்குதல் என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டு வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு கடன் வழங்கி உதவி செய்துள்ளது. அதாவது, அவ்வாறு வந்தவர்களில் திறமை மற்றும் பயிற்சி பெற்றவர்களுக்கு புதிய தொழில் தொடங்குவதற்கும் வழங்கப்பட்டது. பழைய தொழில் தொடர்ந்து செயல்படுத்துவதற்கும் உதவும் விதமாக கடன் வழங்கியுள்ளது. இந்த கடன் தொகை 1 லட்சம் வரை வழங்கப்படும். மேலும் இந்த கடன் தொகையானது குறைந்த வட்டியில் நீண்ட நாள் கடனாக வழங்கப்படுகிறது.

Airtel & VI பயனர்களுக்கு சூப்பர் திட்டம் – T20 உலகக்கோப்பை போட்டிகள் சலுகை!

இத்திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி, கருங்குளம் மற்றும் சாத்தான்குளம் வட்டாரங்களைச் சார்ந்த 105 ஊராட்சிகளில் செயல்பட்டு வருகிறது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட பயனாளிகளின் வசதிக்காக ஒரு ஓரிட சேவை மையம் (ஓ.எஸ்.எப்)செயல்பட உள்ளது. இந்த ஓரிட சேவை மையம் மூலம் அனைத்து வகையான புதிய மற்றும் மேம்படுத்தப்பட வேண்டிய அரசு ஊரக தொழில்களுக்கு தேவையான தொழில் திட்டம் தயார் செய்தல், நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் திறன் வளர்ப்பு போன்ற பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறாக ஓரிட சேவை மையம் தொடங்குவதற்கு அனைத்து செயல்பாடுகளும் முடிவுறும் நிலையில் உள்ளது. அதனை தொடர்ந்து இந்த மையத்தில் பணிபுரிய தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர் (இ.டி.ஓ), தொழில் முனைவு நிதி அலுவலர் (இ.எப்.ஓ)போன்ற தற்காலிக பணியிடங்கள் காலியாக உள்ளது.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க அனுமதி? தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை!

இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கு வயது வரம்பு 40 க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் முதுநிலை பட்டம் பெற்றவராக இருத்தல் அவசியம். அதன்படி தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்த தகவல்களுக்கு www.tnrtp.org என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை நேரடியாகவோ அல்லது தபால் மூலியமாகவோ தூத்துக்குடி மாவட்ட திட்ட அலுவலகத்தில் நவ.15-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கலாம். மேலும் இதுகுறித்த விபரங்கள் அறிய மாவட்ட செயல் அலுவலர், தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, பழைய தாலுகா அலுவலகம், பீச் ரோடு, தூத்துக்குடி என்ற முகவரியிலோ அல்லது 0461-2902744 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!