Airtel & VI பயனர்களுக்கு சூப்பர் திட்டம் – T20 உலகக்கோப்பை போட்டிகள் சலுகை!

0
Airtel & VI பயனர்களுக்கு சூப்பர் திட்டம் - T20 உலகக்கோப்பை போட்டிகள் சலுகை!
Airtel & VI பயனர்களுக்கு சூப்பர் திட்டம் - T20 உலகக்கோப்பை போட்டிகள் சலுகை!
Airtel & VI பயனர்களுக்கு சூப்பர் திட்டம் – T20 உலகக்கோப்பை போட்டிகள் சலுகை!

தற்போது T20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் வாடிக்கையாளர்களுக்கு Airtel & VI பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த சலுகைகள் குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.

சலுகைகள்:

கொரோனா காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல் உருவானது. இதனால் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பயனர்களுக்கு பல்வேறு சலுகைகளை போட்டி போட்டுக்கொண்டு வழங்கி வந்தனர். தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. டி20 உலகக்கோப்பை போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வரும் நிலையில் அவர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க அனுமதி? தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை!

வோடபோன் ஐடியாவில் வழங்கப்படும் ரூ.501, ரூ.701 மற்றும் ரூ.901 திட்டங்களில் பயனர்களுக்கு நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிடெட் கால் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. ரூ.501 திட்டத்தில் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் அளவிற்கு பயனர்கள் 16 ஜிபி போனஸ் டேட்டா வழங்கப்படுகிறது.

அதேபோல் ரூ.701 திட்டத்தில் 56 நாட்கள் செல்லுபடியாகும் அளவிற்கு 32 ஜிபி போனஸ் டேட்டா வழங்கப்படுகிறது. ரூ .901 திட்டத்தில் 84 நாட்கள் செல்லுபடியாகும் அளவிற்கு பயனர்கள் 48 ஜிபி போனஸ் டேட்டா வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து ரூ.2595 திட்டமானது தினசரி 1.5 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிடெட் கால் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. மேலும் 100 எஸ்எம்எஸ் என 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் வி மூவீஸ் & டிவி, பிங்கே ஆல் நைட் மற்றும் வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர் சலுகைகளுக்கு இலவச சந்தா உடன் வருகிறது.

இந்நிலையில் ரூ.601 டேட்டா மட்டும் திட்டத்தில் பயனர்களுக்கு 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் அளவிற்கு 75 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.இந்த திட்டங்கள் அனைத்தும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் மட்டும் சந்தாவிற்கு இலவச சந்தாவுடன் வருகின்றன. இதன் பொருள் நீங்கள் இந்த ரீசார்ஜ் திட்டங்களுடன் ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலை மட்டுமே அணுக முடியும்.

தமிழகத்தில் நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு – சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த ஆலோசனை!

அதேபோல் ஏர்டெல் நிறுவனம் பயனர்களுக்கு ரூ.499, ரூ.699 மற்றும் ரூ.2798 என மூன்று திட்டங்களை வழங்கி வருகிறது. ஏர்டெல் வழங்கும் ரூ.499 திட்டமானது தினசரி 3ஜிபி டேட்டா என 28 நாட்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ரூ .699 மற்றும் ரூ .2798 திட்டங்கள் அடங்கிய மற்ற இரண்டு திட்டங்களும் 56 ஜிபி மற்றும் 365 நாட்களுக்கு 2 ஜிபி தினசரி டேட்டாவை வழங்கிவருகிறது. ஏர்டெல் வழங்கும் இந்த அனைத்து திட்டங்களும் அன்லிமிடெட் கால் வசதி மற்றும் 100 எஸ்எம்எஸ்/நாள் மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் பலன்களை வழங்குகின்றன, இதில் ஒரு மாதத்திற்கான இலவச அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு அடங்கும். பயனர்களுக்கு இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் வழங்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!