வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களுக்கு அரசு வேலை

0
வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களுக்கு அரசு வேலை
வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களுக்கு அரசு வேலை

வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களுக்கு அரசு வேலை

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமானது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையுடன் இணைந்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களது திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு குறுகிய கால திறன் பயிற்சிகளை அளித்து அவர்களது வேலைபெறும் திறனை அதிகரித்து அதன் மூலம் தனியார்துறை நிறுவனங்களில் பணிநியமனம் பெற்று வழங்கும் சேவையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தற்போது தேனி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் இருந்து ஒரு செய்தி குறிப்பு வெளியாகியுள்ளது. அதில் அவர் வேலைவாய்ப்பு துறை பற்றிய செய்தினை அறிவிப்பாக வெளியிட்டு உள்ளார்.

தற்போது கொரோனா நோய் தொற்று உலகளவில் ஏற்படுத்திய தாக்கத்தை அடுத்து வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து தமிழர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர்.

அவர்களது வேலைத்திறன் மற்றும் முன்அனுபவங்களை கண்டறிந்து தகுதிக்கேற்ப தனியார் துறைகளில் பணிவாய்ப்பினை பெற உதவுவதற்கும் திறன் பயிற்சி தேவைப்படும் நேர்வுகளில் அவர்களுக்கு உரிய திறன் பயிற்சி வழங்கி தனியார்துறை நிறுவனங்களில் பணிவாய்ப்பினை பெற உதவுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையுடன் இணைந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மேற்கொண்டு வருகின்றது.

எனவே வெளிநாடுகள் மற்றம் இதர மாநிலங்களிலிருந்து தேனி மாவட்டத்திற்கு திரும்பிய தமிழர்கள் தாங்கள் விரும்பும் திறன் பயிற்சி மற்றும் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பினை பெற உதவுவதற்கென தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் இணையதளத்தில் பிரத்யேகமாக
வடிவமைக்கப்பட்ட இணையதளப் பக்கத்தில் பதிவு செய்து மேலும் கூடுதல் விவரங்களுக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலரை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!