ஆன்லைன் வகுப்புகளுக்கு நெறிமுறைகள் வெளியீடு

0
ஆன்லைன் வகுப்புகளுக்கு நெறிமுறைகள் வெளியீடு
ஆன்லைன் வகுப்புகளுக்கு நெறிமுறைகள் வெளியீடு

ஆன்லைன் வகுப்புகளுக்கு நெறிமுறைகள் வெளியீடு

கொரோனா வைரஸ் காரணமாக அணைத்து கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் அனைத்து கல்லூரிகளும் இவனும் திறக்கப்படவில்லை. இதனால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையுமெடுக்க முடியாமல் கல்வி துறை திணறி வருகிறது.

உயர் கல்வித்துறை ஆனது மாணவர்களுக்கு தேர்ச்சியினை மாறு வழியில் வழங்கி வருகிறது. அதாவது மாணவர்களின் வருகை பதிவேடு மற்றும் அக மதிப்பீடு முறை மூலம் தேர்ச்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த கல்வியாண்டு தொடங்குவதும் தாமதமாகிறது.அதனால், ஆன்லைன் கல்வி முறையை ஊக்குவிக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதற்கு, சில கட்டுப்பாடுகளையும் விதித்து உள்ளது அரசு. மாணவர்களின் நலன் கருதியும் அவர்களது உடல்நலத்தை கருத்தில் கொண்டும் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகள் :
  • மூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தான் ஆன்லைன் வகுப்பு எடுக்கப்பட வேண்டும்.
  • ஒரு வகுப்பு குறைந்தபட்சமாக 40 முதல் 45 நிமிடங்கள் வரை தான் இருக்க வேண்டும்.
  • காலை 9 மணி முதல் இரவு 7 மணி குள் இந்த வகுப்புகள் இருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு ஆன்லைன் வகுப்பு முடிந்ததும் முறையாக 10 முதல் 15 நிமிடங்கள் வரை இடைவேளை விட வேண்டும்.
  • ஆசிரியர்கள் ஒரு நாளைக்கு 6 வகுப்புகள் வரை எடுக்கலாம், மொத்தமாக ஒரு மாதத்திற்கு 28 வகுப்புகள் தான் எடுக்க வேண்டும்.
  • வாரநாட்களில், 1 முதல் 8 வரை உள்ள மாணவர்களுக்கு கண்டிப்பாக 40 நிமிடங்கள் தான் ஆன்லைன் வகுப்புகள் இருக்க வேண்டும்.

இந்த வழிமுறைகள் பள்ளிக்கல்வி துறை சார்பில் வெளியிடபட்டு உள்ளது. பெற்றோர்களிடம் இருந்து அதிகமாக புகார் எழுந்ததால் இந்த நடவடிக்கையை பள்ளிக்கல்விதுறை எடுத்துள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!