தமிழகத்தில் நடப்பாண்டிற்கான பட்ஜெட் உரை மீதான விவாதம் – இன்று தொடக்கம்!

0
தமிழகத்தில் நடப்பாண்டிற்கான பட்ஜெட் உரை மீதான விவாதம் - இன்று தொடக்கம்!
தமிழகத்தில் நடப்பாண்டிற்கான பட்ஜெட் உரை மீதான விவாதம் - இன்று தொடக்கம்!
தமிழகத்தில் நடப்பாண்டிற்கான பட்ஜெட் உரை மீதான விவாதம் – இன்று தொடக்கம்!

தமிழகத்தில் 2021-22 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று முதல் 3 நாட்களுக்கு பட்ஜெட் உரை மீதான விவாதம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட்:

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று பல மாதங்கள் ஆன நிலையில் 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் நிதிநிலை அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. கடந்த ஆட்சியின் போது பிப்ரவரி மாதம் தேர்தல் காரணமாக இடைக்கால நிதி நிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள திமுக அரசு முழு நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

ரூ.31,000/- ஊதியத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை !

இந்நிலையில், தமிழக அரசின் 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதியும், பட்ஜெட் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதியும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதற்கான கணிணிகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியான அமைப்புகள் கலைவாணர் அரங்கத்தில் பொருத்தப்பட்டிருந்தன. நிதி அமைச்சரும் டேப்லெட் திரையைப் பார்த்தபடி பட்ஜெட் உரையை முழுமையாக வாசித்து முடித்தார்.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள், முடிவுக்கு வந்த 20 ஆண்டுகால போர் – வெளியேறிய அதிபர்!

இந்த ஆண்டு பட்ஜெட்டில் பல்வேறு துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில், சட்டப்பேரவை வரலாற்றில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு முதல் முறையாக தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்ஜெட் உரை மீதான விவாதம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் நடைபெறுகிறது. இந்த பட்ஜெட் ஏழு மாதங்களுக்கான பட்ஜெட் என்பதால், இது ஒரு திருத்தப்பட்ட பட்ஜெட் அறிக்கையாகவே இருக்கும் என நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

இன்று முதல் மாலை 5 மணிவரை மட்டுமே கடைகள் திறப்பு – வணிகர் சங்கம் முடிவு!

அதே போன்று திருத்தப்பட்ட பட்ஜெட் உரையாக தான் இந்த பட்ஜெட் இருந்தது. இன்று பட்ஜெட் உரை மீதான விவாதத்திற்காக சபை கூடும் போது மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மதுசூதனன், திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர், சென்னை கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டப்பேரவையில் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here