ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள், முடிவுக்கு வந்த 20 ஆண்டுகால போர் – வெளியேறிய அதிபர்!

0
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள், முடிவுக்கு வந்த 20 ஆண்டுகால போர் - வெளியேறிய அதிபர்!
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள், முடிவுக்கு வந்த 20 ஆண்டுகால போர் - வெளியேறிய அதிபர்!
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள், முடிவுக்கு வந்த 20 ஆண்டுகால போர் – வெளியேறிய அதிபர்!

ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தாலிபான்களுக்கும் இடையே நீண்ட காலமாக நடைபெற்று வந்த உள்நாட்டு போர், தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனிடையே அதிபர் அஷ்ரப் கனி அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

போர் முடிவு

ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தாலிபான்களுக்கும் இடையே நடைபெற்று வந்த உள்நாட்டு போரானது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் தாலிபான்களுக்கு ஆதரவாக இருந்த அல்கொய்தா தலைவர் பின்லேடனை அமெரிக்க அரசு திட்டமிட்டு கொன்ற பிற்பாடு, அந்நாட்டில் தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்தது. இதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானை, முழுமையான இஸ்லாமியர்களின் நாடாக மாற்ற முயற்சித்த தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது.

ரூ.31,000/- ஊதியத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை !

இந்நிலையில் தாலிபான்களுக்கு எதிரான ஆப்கானிஸ்தான் அரசுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் களமிறங்கியது. ஆனால் தொடர்ந்து அதிகரித்து வந்த தாலிபான்களின் அட்டூழியத்தால் அமெரிக்க அரசு படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரு முக்கிய ஒப்பந்தத்துடன் வெளியேறியது. இப்போரில் மட்டும் லட்சக்கணக்கான உயிர்கள் மாண்டது. அனால் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பின்னர் அந்நாட்டின் ஒவ்வொரு முக்கியமான நகரங்களை தாலிபான்கள் கைப்பற்ற துவங்கிய தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

இதை தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானிஸ்தானை தாலிபான்களிடமே ஒப்படைப்பதாக அறிவித்து விட்டு அந்நாட்டை விட்டே வெளியேறியுள்ளார். இப்போது அதிபர் மாளிகை தாலிபான்களின் கைவசம் கொடுக்கப்பட்டுள்ளது. முழு நாட்டையும் தன் வசப்படுத்திய தாலிபான்கள் காபூல் நகரம் 20 வருடங்களுக்குள் மாறிவிட்டதை எண்ணி உற்சாகத்துடன் இருப்பது போல அந்நாட்டை சேர்ந்த அல் ஜசீரா ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனிடையே தாலிபான்களின் வசம் ஆப்கானிஸ்தான் வந்துவிட்டதால் அச்சத்துடன் காணப்பட்ட பொது மக்கள் அங்கிருந்து பாகிஸ்தானை நோக்கி படையடுத்து வருகின்றனர்.

இன்று முதல் மாலை 5 மணிவரை மட்டுமே கடைகள் திறப்பு – வணிகர் சங்கம் முடிவு!

அதன் படி ஆப்கானிஸ்தான் தற்போது தாலிபான்கள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்கு முன்னதாக சில முக்கிய ஆவணங்களை எரித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நிலைமையை பற்றி விவாதிக்க ஐநா சபை இன்று (ஆகஸ்ட் 16) கூடுகிறது. இந்தியா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் மாற்றங்கள் குறித்து ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டாரஸ் சபையின் உறுப்பு நாடுகளுக்கு விளக்க உள்ளார் என தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here