அரியர் தேர்ச்சி விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி – AICTE விதிகளுக்கு புறம்பாக முடிவெடுக்க முடியாது என திட்டவட்டம்

2
அரியர் தேர்ச்சி விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி
அரியர் தேர்ச்சி விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி

அரியர் தேர்ச்சி விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி – AICTE விதிகளுக்கு புறம்பாக முடிவெடுக்க முடியாது என திட்டவட்டம்

தமிழகத்தில் நிலவும் அரியர் தேர்ச்சி விவகாரத்தில் தற்போது உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை வெளியிட்டு உள்ளது. AICTE விதிகளுக்கு புறம்பாக முடிவெடுக்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இறுதிப்பருவம் தவிர்த்து பிற பருவ தேர்வுகள் எழுதுவதில் இருந்து கல்லூரி மாணவர்களுக்கு விலக்கு அளித்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னதாக அறிவித்து இருந்தார். மேலும் அரியர் தேர்வுகளுக்கு பணம் செலுத்தி உள்ள மாணவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர். எனவே அரசின் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் விளக்கம் அளித்த அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் (AICTE) அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்கிற முடிவு யுஜிசி விதிமுறைகளுக்கு புறம்பானது என தெரிவித்தது.

இந்த வழக்கில், தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்ப்பது எப்படி? என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் அரியர் தேர்ச்சி விவகாரத்தில் AICTE விதிகளுக்கு புறம்பாக முடிவெடுக்க முடியாது என கூறிய நீதிபதி, இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் தமிழக அரசு விளக்கம் அளிக்க நவம்பர் 20 வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டு உள்ளார்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. Super government November 20 to extend ah student life semmaiya enjy pannuthu 1year waste pannitingala student life ahh 1side no exam and other side case extended. Nice

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!