தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பாடங்கள் குறைப்பு? அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் காரணத்தால் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பாடத்திட்டத்தை குறைத்து போல, தமிழகத்திலும் குறைப்பது குறித்து ஆலோசனை நடத்திய பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. முதற்கட்ட நடவடிக்கையாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும், மாநில அரசின் வாரிய தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் – வானிலை அறிக்கை!!
கடந்த ஆண்டு பொதுத்தேர்வு சுமையை குறைக்க சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு பாடங்களில் 30 சதவிகிதத்தை குறைப்பதாக அறிவித்தது. இந்த ஆண்டும் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக அனைத்து பாடங்களையும் முழுமையாக முடிக்க முடியாத காரணத்தால் பாடங்களை குறைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா காரணமாக பொதுத்தேர்வை இரண்டு பிரிவுகளாக பிரித்து நடத்த உள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
TN Job “FB
Group” Join Now
அந்த வரிசையில் சிபிஎஸ்இ.,யை போல தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு பாடத்திட்டங்களில் 30 சதவிகிதத்தை குறைப்பது குறித்து ஆலோசனை நடத்திய பின்னர் முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் அனைத்து பாடங்களிலும் 30 சதவீத பாடத்திட்டத்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கதாகும்.