தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – அதிகாரபூர்வ அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மதிப்பெண்கள் மதிப்பீடு செய்வதற்க்கு தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
பொதுத்தேர்வு ரத்து:
CBSE மாணவர்களின் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தார். அதனையடுத்து பல்வேறு மாநில அரசுகளும் வரிசையாக பொதுத்தேர்வுகளை ரத்து செய்து வந்தன. தமிழகத்திலும் இது தொடர்பாக பல்வேறு கட்ட ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது. இறுதியாக சட்டமன்ற உறுப்பினர் குழு கூட்டத்தில் 11 கட்சிகள் பொதுத்தேர்வை நடத்தலாம் என ஆதரவு தெரிவித்தன. மேலும் பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகேட்பு விபரங்கள் முதல்வரிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. மருத்துவ நிபுணர் குழுவிடமும் ஆலோசனை நடைபெற்றது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மறுஅறிவிப்பு வரும் வரை மூடல் – இயக்குனர் சுற்றறிக்கை!!
இதன் முடிவில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூரவ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் தலைமையில், உயர்கல்வித் துறை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஆகியோரை கொண்ட குழு ஒன்று மதிப்பெண்கள் வழங்கும் முறைகள் பற்றி ஆராய அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தரும் பரிந்துரையின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
மேலும் தமிழகத்திலுள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் அந்த மதிப்பெண்கள் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும் என உறுதிபட தெரிவிக்கப்பட்டு உள்ளது. நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் வாயிலாக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.