தேர்வில்லாமல் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை – சம்பளம்: ரூ.1,25,000/-
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள Deputy General Manager (Risk Management) மற்றும் Assistant General Manager பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் 30.07.2021 க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி |
பணியின் பெயர் | Deputy General Manager & Assistant General Manager |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.07.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி காலிப்பணியிடங்கள்:
Deputy General Manager (Risk Management), Deputy General Manager (Integrated Treasury), Assistant General Manager மற்றும் Deputy General Manager (Operations / Administration) பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
TN Job “FB Group” Join Now
TMB வங்கி வயது வரம்பு:
- Deputy General Manager (Risk Management), Deputy General Manager (Integrated Treasury) ஆகிய பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 30.06.2021 தேதியின் படி, அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும்.
- Deputy General Manager (Operations / Administration) பதவிக்கு 30.06.2021 தேதியின் படி, அதிகபட்சம் 45 முதல் 55 க்குள் இருக்க வேண்டும்.
- Assistant General Manager பதவிக்கு 30.06.2021 தேதியின் படி, வயதானது அதிகபட்சம் 53 க்குள் இருக்க வேண்டும்.
Manager கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Graduate / Post Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். குறுகிய பட்டியல் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரம் தகுதியான தேர்வர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும்.
மாத சம்பளம்:
தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.1,25,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
வங்கி துறையில் பணியாற்ற விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://www.tmbnet.in/tmb_careers/ என்ற இணைய முகவரி மூலம் 30.07.2021 வரை தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.