தொழில் மேம்பாடு நிதியாக சிறப்பு கடன் – திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!

0
தொழில் மேம்பாடு நிதியாக சிறப்பு கடன் - திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!தொழில் மேம்பாடு நிதியாக சிறப்பு கடன் - திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!
தொழில் மேம்பாடு நிதியாக சிறப்பு கடன் - திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!
தொழில் மேம்பாடு நிதியாக சிறப்பு கடன் – திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்துறையினர் தொழில்மேம்பாட்டு நிதியாக சிறப்பு கடன் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிறப்பு கடன்:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ஊரடங்கு காலத்தில் அறிவிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளினால் தொழில்துறையினர் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு உதவும் விதமாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தேசியமயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கி, கூட்டுறவு சங்கங்கள், கிராம வங்கிகள், நுண் கடன் நிறுவனங்கள் மூலம், முறையாக கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தியவர்கள் இந்த திட்டத்தில் பலனடையலாம்.

நாட்டில் சில்லறை விற்பனை 79% பாதிப்பு – கொரோனா தொற்று எதிரொலி!!

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தனிநபர், தொழில்துறையினர் அவர்களின் தொழில் மேம்பாட்டுக்காக இந்திய ரிசர்வ் வங்கிசிறப்பு கடன் திட்டங்களையும், கடன் மறுசீரமைப்பு திட்டங்களையும் அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளது. தொழில்மேம்பாட்டு பணிகளுக்காக அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தில், 2020 பிப்., மாத நிலவரப்படி நிலுவை கடனில் 20 சதவீதம் மீண்டும் கடனாக வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டில் இது 10% கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும்.

ஜூன் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

வரும் செப்டம்பர் மாதம் வரை இந்த திட்டத்தில் மக்கள் பலனடைந்து கொள்ளலாம். இந்த கடனை 5 முதல் 7 வருட தவணையாக நீடித்துக் கொள்ளும் வசதி உள்ளது. ஆக்சிஜன் செறிவூவூட்டி, வென்டிலேட்டர் தயாரிப்பு, கோவிட் மருந்து தயாரிப்பு, முககவசம், முழு உடல் கவச உடை தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களுக்கு, 50 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும். எவ்வித பணயமும் இல்லாமல் இதற்கு 2 கோடி வரை கடன் பெறலாம்.

தமிழகத்தில் அர்ச்சகர் பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!!

வீட்டுக்கடன், நுகர்வோர் கடன், வாகன கடன், கல்விக்கடன் மற்றும் தனிநபர் கடன் ஆகியவற்றுக்கு தவணை செலுத்துவதற்கான அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனாவில் பாதித்த வாடிக்கையாளர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு, வங்கி விதிமுறைப்படி, குறைந்தபட்சம், 25 ஆயிரம் ரூபாய் முதல், ஐந்து லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படும். இந்த கடன் திட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான உதவிகளை மாவட்ட முன்னோடி வங்கியில் அறிந்து கொள்ளலாம் என்று திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!