நாட்டில் சில்லறை விற்பனை 79% பாதிப்பு – கொரோனா தொற்று எதிரொலி!!

0
நாட்டில் சில்லறை விற்பனை 79% பாதிப்பு - கொரோனா தொற்று எதிரொலி!!
நாட்டில் சில்லறை விற்பனை 79% பாதிப்பு - கொரோனா தொற்று எதிரொலி!!
நாட்டில் சில்லறை விற்பனை 79% பாதிப்பு – கொரோனா தொற்று எதிரொலி!!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக அனைத்து மாநிலங்களிலும் பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா காலத்தில் 79 சதவிகிதம் சில்லறை விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில்லறை விற்பனை:

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் மக்களை தாக்கி வந்தது. இதை அடுத்து நடப்பு ஆண்டான 2021 இல் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலையாக உருவெடுத்து மக்களை மிக அதிகமான அளவில் தாக்கி வருகிறது. மேலும் இரண்டாம் அலையில் அதிக அளவிலான உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலம் தோறும் பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது.

இந்தியாவில் ட்விட்டர் மீதான சட்ட பாதுகாப்பு நீக்கம் – மத்திய அரசு அறிவிப்பு!!

மேலும் பொதுமுடக்கம் காலத்தில் சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மொத்த விற்பனை கடைகள் மட்டுமே பெரும்பாலும் திறக்கப்பட்டு விற்பனை நடத்தி வருகிறது. இதனால் சில்லறை விற்பனை கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. இதுகுறித்து Retailers Association of India(RAI)ஆய்வு ஒன்றை நடத்தி அதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது, அதன்படி கொரோனா இரண்டாவது அலையில் நாட்டில் 79% சில்லறை விற்பனை குறைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

குறிப்பாக நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு மாநிலங்களில் சில்லறை விற்பனை 83 சதவிகிதம் குறைந்துள்ளது. மேலும் கிழக்கு மாநிலங்களில் 75 சதவிகிதம் மற்றும் தெற்கு மாநிலங்களில் 73 சதவிகிதம் சில்லறை விற்பனை குறைந்துள்ளதாக இந்திய சில்லறை விற்பனை அமைப்பு தகவல் அளித்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையில் 49% குறைந்து காணப்பட்ட சில்லறை விற்பனை நடப்பாண்டான 2021 இல் 79 சதவிகிதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!